வெளியானது நேர்கொண்ட பார்வை படத்தின் ‘வானில் இருள்’ பாடல் வீடியோ.!

0
642
Nerkonda-Paarvai

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி தற்போதும் யூடுயூப்பில் பட்டையைகிளப்பி வருகிறது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். ஆனால், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் அவரை காண முடியவில்லை.

இதையும் பாருங்க : பாடல் பாடி லாஸ்லியாவை அழ வைத்த முகுன்.! என்ன நடக்குது பிக் பாஸ்ல.! 

- Advertisement -

இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘வானில் இருள்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. கேட்பதற்கு மென்மையாக இருக்கும் இந்த பாடலின் வரிகளும், யுவனின் இசையும் நம் மனதை லேசாக்குவது போல இருக்கிறது. இதோ அந்த பாடல்.

இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்னதாகவே இந்த படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

-விளம்பரம்-
Advertisement