நேருக்கு நேர் படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்த நடிகையா இது – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

0
497
- Advertisement -

நேருக்கு நேர் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா இருவரும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள். இது தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். இந்த திரைப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா ரகுவரன் என்று பலர் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அஜித் தான் நடித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அஜித் இந்த படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டார். அதற்கு பிறகு தான் இந்த படத்தில் சூர்யா நடித்தார். இந்த படத்தில் நடிகர் ரகுவரனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சாந்தி கிருஷ்ணா. இவர் 1981ஆம் ஆண்டு வெளியாகியிருந்த சிவப்பு மல்லி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

- Advertisement -

சாந்தி கிருஷ்ணா குறித்த தகவல்:

அதற்கு பின் இவர் மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், பன்னீர் புஷ்பங்கள், நேருக்கு நேர் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருந்தார். பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருந்தார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது.

சாந்தி கிருஷ்ணா லேட்டஸ்ட் புகைப்படம்:

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் விஜய் பட நடிகையா இவர்! என்று ஆச்சரியத்தில் புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள். தற்போது விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த லியோ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உட்பட பல நடிகர்கள் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் திரைப்பயணம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இதனை அடுத்து தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்பரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இவர் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இதற்கு பிறகு இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.

சூர்யா திரைப்பயணம்:

கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இதை அடுத்து தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து’வருகிறார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதை அடுத்து சில படங்களில் சூர்யா கமிட்டாகி இருக்கிறார்.

Advertisement