சுதப்பிய திருமண Plan, பறிபோன பல கோடி பணம் – திருமண புகைப்படங்களை ஒரு மாதம் கழித்து வெளியிட்ட விக்னேஷ் சிவன். அதுக்கு காரணம் இதான்.

0
673
- Advertisement -

தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்று இருந்தது.

-விளம்பரம்-

மிகவும் private ஆக நடைபெற்ற இந்த திருமணத்தில் உடை கட்டுப்பாடு, மொபைல் போன் எடுத்து வர கூடாது, க்யூ ஆர் கோடு காண்பித்தால்தான் உள்ளே விடுவோம் என்று பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள். அதே போல திருமணம் நடைபெற்ற  மகாபலிபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த பயணிகளுக்கு கூட அந்த பகுதியில் உலாவ பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும், மீடியாவிற்கு கூட உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘மன்னிச்சிடுங்க நண்பா’ – பீஸ்ட் படம் குறித்தும் விஜய் Reaction குறித்தும் கேலியாக பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பீஸ்ட் பட நடிகர்.

பல கட்டுப்பாடுகளுடன் நடந்த திருமணம் :

இந்த திருமணத்தில் 200 vipகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பத்திரிக்கை நண்பர்கள் அனுமதிக்கப்படாததால் நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை ஆனால் திருமணம் முடிந்த பின்னர் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார் எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்க முக்கிய காரணமே விக்னேஷ் சிவன் நயன்தாராவின் திருமண வீடியோவை பிரபல OTT தளமான நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு இந்த தம்பதி விற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

25 கோடிக்கு பேரம் பேசிய நயன் :

மேலும், தங்கள் திருமண வீடியோவை ஒளிபரப்ப நெட் பிக்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய் விலை பேசி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரபல இயக்குனர் கௌதம் மேனனை வைத்து தங்கள் திருமணத்தை வீடியோ எடுத்தனர் இந்த தம்பதி. அதனால்தான் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த ஒரு திருமண புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் வெளியிடாமல் இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக தன்னுடைய அடுத்தடுத்த திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஒரு மாதம் கழித்தும் வெளியிடாத Netflix :

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், விஜய் சேதுபதி இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என்று பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு இருந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஆனால், திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நயன்தாராவின் திருமண வீடியோ Netflixல் வெளியாகவில்லை.

ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு Netflix :

இதற்கு முக்கிய காரணமே விக்னேஷ் சிவன் நயன்தாராவின் திருமண பிளான் சொதப்பியதால் தான் அதாவது விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண வீடியோவை ஒளிபரப்ப இருந்த நெட்பிக்ஸ் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை நிறுத்திக் கொண்டுள்ளது இதற்கு முக்கிய காரணமே தற்போது திருமண வீடியோவை வெளியிட்டால் தாங்கள் செலவு செய்த 25 கோடி ரூபாய் பணம் திருப்பி கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தான் அந்த ஒப்பந்தத்தை Netflix நிறுவனம் முறித்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

Advertisement