ஆடை மட்டும் 9****, இந்த குட்டி பர்ஸ் எவ்ளோ தெரியுமா ? அசரவைத்த தோனி பட நடிகை திஷா பதானி (பர்ஸ் வாங்குன காச கூட உள்ள வைக்க இடமிருக்காதே)

0
373
disha
- Advertisement -

பாலிவுட் நடிகை திசா பதானி அணிந்து இருந்த ஆடையின் விலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் திஷா பதானி. 2015ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான லோபர் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வருண் தேஜாவிற்கு ஜோடியாக திசா பதானி நடித்திருந்தார். எஇந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதன்பின் இவர் 2016ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் இவர் எம்எஸ் தோனியின் முதல் காதலியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பாலிவுட்டில் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

திசா பதானி திரைப்பயணம்:

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த பாகி 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார் திசா பதானி. இந்த படத்தில் இவர் டைகர் ஷெராப் உடன் இணைந்து நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு பாகியின் முதல் பாகம் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தான் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருந்தது. பின் 2019ஆம் ஆண்டு வெளிவந்திருந்த பாரத் என்ற படத்திலும் இவர் நடித்து இருந்தார்.

திசா பதானி பற்றிய தகவல்:

இப்படி இவர் ஹிந்தி,தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் பிஸியான நடிகையாக இருந்தாலும் பிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவரை ஸ்டைலிஸ் குயின் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் மாடல் உடையில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

-விளம்பரம்-

திசா பதானி அணிந்து இருந்த ஆடை:

அதில் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷூட், வீடியோ என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் திசா பதானி அணிந்திருக்கும் ஆடையின் விலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் திசா பதானி அவர்கள் விழா ஒன்றிற்கு சென்றிருந்தார். அதில் lilac கலர் மினி ஆடையை அணிந்து இருந்தார். அத்துடன் கையில் ஒரு அழகான பரிசையும் வைத்திருந்தார்.

திசா பதானி ஆடை விலை:

இதுதொடர்பான வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. அதோடு இவர் அணிந்திருந்த ஆடை விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆடை ஒரு பிராண்டட். UK மதிப்பில் இந்த ஆடையின் விலை 1,215 euros. இந்தியாவின் மதிப்பீடுகளை வைத்து கணக்கிட்டால் Rs. 97,882. மேலும், இவர் கையில் வைத்திருந்த பர்ஸ் 46,000 ரூபாய். தற்போது இவர் அணிந்திருந்த ஆடை குறித்த விலை சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாயைப் பிளந்து விட்டார்கள்.

Advertisement