விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 18 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். மேலும், இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். பின் இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் அர்னவ் வெளியேறி இருந்தார். இந்த வாரம் ஆண்கள் அணியில் இருந்து ஜெப்ரி, பெண்கள் அணியில் இருந்து சாச்சனா இடம் மாறி இருந்தார்கள். பின் மூன்றாம் வாரத்திற்கான நாமினேஷனில் தர்ஷா, அருண், ஜாக்லின், அன்ஷிதா,பவித்ரா ஜனனி, சத்யா, முத்துக்குமரன், சௌந்தர்யா ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 8:
இந்த வாரம் மீண்டும் கேப்டனாக தர்ஷிகா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த வாரம் ஸ்டார் ஹோட்டல் என்ற வீக்லி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். ஹோட்டல் நிர்வாகத்தை முதலில் பெண்கள் அணியிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் செய்ததில் சில குறைகளை சொல்லி மேனேஜரை ஆண்கள் மாற்ற வைத்தனர். அதற்குப்பின் சுனிதா மேனேஜர் ஆனார். அதோடு நாமினேஷனுக்காக முதல் டாஸ்கில் ஆண்கள் அணி வெற்றி பெற்று இருந்தார்கள்.
#Sunitha 😡😡
— BB Mama (@SriniMama1) October 23, 2024
Ippadi pesa mattum ungalukku language issue illa appadithanae 👍👍👍#BiggBoss8Tamil #biggbosstamil8 #BiggBossTamilSeason8 #BBMama
pic.twitter.com/hdNiEHYfgL
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பெண்கள் கஸ்டமர் ஆகவும், ஆண்கள் ஓட்டல் நிர்வாகத்தையும் பார்த்திருந்தார்கள். வழக்கத்தை விட ஆண்கள் அணியின் மீது குறை சொல்லியே தீர வேண்டும் என்ற நோக்கில் பெண்கள் இருந்ததால் மேனேஜரை மாற்றி இருந்தார்கள். அதற்குப்பின் வீக்லி டாஸ்க்கில் படத்தின் பெயரை சரியாக ஆக்சன் செய்து கண்டுபிடிக்க வேண்டும். அதில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றார்கள். இதுவரை நடந்த இரண்டு நாட்களில் இருவருமே சமமாக இருக்கிறார்கள்.
Ithalam oruthanum onnum solla kudathu 🤐
— Aaru Bhai (@aaruksamy) October 23, 2024
It's all fun when a girl does it. #BiggBossTamil #BiggBoss8Tamil#BiggBossTamilSeason8pic.twitter.com/MP2vnAyukB
பெண்கள் அணி செய்த வேலை:
இப்படி இருக்கும் நிலையில் பெண்கள் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது, ஜெஃப்ரி தன்னுடைய உள்ளாடையை எடுத்து அடுக்கி வைத்திருந்தார். அதை பார்த்த பெண்கள் சிலர், கலர் கலரா ஜட்டி வச்சிருக்க, எங்கடா வாங்குன என்று கமெண்ட் செய்தார்கள். உடனே சுனிதா, நம்முடைய ஜட்டியையும் இந்த உலகமே தான் பார்க்குது என்று ரொம்ப வல்கராக பேசி இருந்தார். அதற்குப்பின் ஆனந்தி, குச்சி குச்சி ஹோதா ஹே என்று கேவலமான சைன் லாங்குவேஜில் காண்பித்து இருக்கிறார்.
Karuppu coin pinnadiyae Sigappu coin poguthu antha mathiri #Jeffry & #Soundariya poranga 🙄🙄
— BB Mama (@SriniMama1) October 24, 2024
Not the best comment Boys & #DharshaGupta ☹️☹️#BiggBoss8Tamil #BiggBossTamil #BiggBossTamil8 #BBMama #BiggBossTamilSeason8
pic.twitter.com/DZWEpXXC9s
நெட்டிசன்கள் கண்டனம்:
அதற்குப்பின் ஆண்கள் அணியுடன் சேர்ந்து தர்ஷா, சிவப்பு காயின் கூடவே கருப்பு காயினும் போகுது என்று சௌந்தர்யா- ஜெஃப்ரியை வைத்து கிண்டலடித்து பேசி இருக்கிறார்கள். இப்படி இவர்கள் செய்திருக்கும் செயலை கண்டித்து தான் நெட்டிசன்கள் விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். ஏற்கனவே லவ் குறித்து பெண்கள் அணிக்குள் பேசியிருந்தார்கள். அப்போது வலு கட்டாயமாக ஜாக்லினும் ஆனந்தியும் மற்ற பெண்களை ஆண்களுடன் ஒப்பிட்டு மோசமாக பேசியிருந்தார்கள். கண்டிப்பாக இந்த வார இறுதியில் இதற்கு விஜய் சேதுபதி தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






