பிக் பாஸ் ஆனந்தி குறும்படம் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்றாவது வாரம் தொடங்கி 19 நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை பெற்று சாச்சனா வெளியேறி மீண்டும் உள்ளே வந்தார்.
பிக் பாஸ் 8:
பின் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இரண்டாவது வாரம் அர்னவ் வெளியேறி இருந்தார். மூன்றாவது வாரம் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் டாஸ்க் சென்று கொண்டு இருக்கிறது. இதில் ஆண்கள் அணி கஸ்டமராகவும், பெண்கள் அணி நிர்வாகம் செய்து இருந்தார்கள். பின் ஆண்கள் அணி நிர்வாகமும், பெண்கள் அணி கஸ்டமராகவும் இருந்தார்கள். அதோடு நாமினேஷன் ப்ரீ பாஸ் டாஸ்க் நடந்தது. அதில் முதல் டாஸ்கில் ஆண்கள் வென்றார்கள். இரண்டாம் டாஸ்கில் பெண்கள் அணி வென்றார்கள். கடைசியில் மூன்றாம் டாஸ்கில் பெண்கள் அணி தான் வென்றார்கள்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் இரண்டு அணியில் இருந்து டாஸ்க்கில் சிறப்பாகவும் மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்களை தேர்வு செய்ய சொல்லி பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதில் சிறப்பாக விளையாடியவர்கள் ஒரு அணியும், மோசமாக விளையாடியவர்கள் ஒரு அணியும் விளையாடி இருந்தார்கள். பின் நிர்வாகம் செய்தவர்கள் தங்களுடைய கருத்துக்களையும், குறைகளையும் சொல்லணும், கஸ்டமர்கள் தங்களுடைய கருத்துக்களையும் குறைகளையும் சொல்ல வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தது.
#MuthuKumaran innum Adikave arambikala athukulla alugai! 😄 #Anandhi's Preventive measure to escape from his direct attack? 😂
— Rasigan 🧊🔥 (@Rasigan_022) October 24, 2024
Ithu romba nalla plan'a Iruke! 😆 #BiggBossTamil8 #BiggBossTamil #BiggBoss8Tamil pic.twitter.com/DhWgKvmJpe
முத்து-ஆனந்தி சொன்னது:
அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களுமே தங்களுடைய குறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்துக்குமரன், ஆனந்தி செய்த தவறை சுட்டிக்காட்டி பேசி இருந்தார். அதற்கு ஆனந்தி, நான் கையில் சாப்பாடு கொண்டு வரும்போது கதவு திறந்து விட ஆள் கூட கிடையாது. நான் என்னுடைய பம்மை வைத்து தான் திறந்தேன். அதற்குப்பின் நீங்கள் சொல்லும் சேவை எல்லாம் செய்து கொண்டுதான் இருந்தேன். அதனால் என் காலில் அடியும் பட்டது. ஆனால், அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் என்னிடம் கோபப்பட்டு பேசினீர்கள் என்று சொல்லி இருந்தார்.
#Anandhi: Avalo than namalla mudichu vitanga ponga..! #Muthukumaran 💥💥💥#BiggBossTamil8 #BiggBossTamil #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 #RJAnandhi pic.twitter.com/hMbjEi5zA1
— Rasigan 🧊🔥 (@Rasigan_022) October 25, 2024
நெட்டிசன்கள் விமர்சனம்:
பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு வருபவர்கள் எல்லாம் அன்பாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று முத்து ஆரம்பித்த உடனே உங்களிடம் பேச விருப்பமில்லை என்று ஆனந்தி தனியாக போய் அழ தொடங்கி விட்டார். பெண்கள் அணி அவருக்கு ஆறுதல் சொல்ல சென்று விட்டார்கள். முத்து சொல்ல வந்த கருத்தையும் யாரும் கேட்கவில்லை. இந்த நிலையில் இதற்கு நெட்டிசன்கள், ஆனந்தி செய்த செயல் தவறு. முத்து இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள உஷாராக ஆனந்தி எஸ்கேப் ஆகிவிட்டார். இது ஒரு நல்ல பிளான் ஆக இருக்கு என்று கமெண்ட் போட்டும் ஆனந்தியை விளாசி குறும்படம் போட்டும் வருகிறார்கள்.






