தன்னைப் பற்றிய உருவ கேலிக்கு நடிகை பவித்ரா லட்சுமி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பவித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்கள் மத்தியில் பேராதரவு இருக்கிறது.

இதுவரை ஐந்து சீசன் முடிந்து இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருப்பவர் பவித்ரா லட்சுமி. இவர் ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். பின் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பின் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருந்தார்.
பவித்ரா திரைப்பயணம்:
அதை தொடர்ந்து இவர் நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் கூட நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கி இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான். அதன் பின் இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருந்த ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
View this post on Instagram
பவித்ரா குறித்த தகவல்:
அதற்குப்பின் இவர் சதீஷ் ஹீரோவாக நடித்திருந்த நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை அடுத்து இவர் மலையாளம், தமிழ் என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் கடந்த ஆண்டு வெளிவந்த ஜிகிரி தோஸ்த் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.

பவித்ரா உருவகேலி:
இதைத் தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தான் இவரின் அம்மா உடல் நலக்குறைவால் இறந்தார். இது பவித்ராவுக்கு பெரும் இடியாக இருந்தது. அதில் இருந்து மீண்டு இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பவித்ரா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. காரணம், அதில் பவித்ரா பார்ப்பதற்கு ரொம்ப ஒல்லியாக இருந்திருக்கிறார். இதை பார்த்து தான் நெட்டிசன்கள், எப்படி இவர்களுடைய லிப்ஸ் இவ்வளவு பெருசா ஆச்சி? குக் வித் கோமாளில் இருந்தபோது இப்படி இல்லை.

பவித்ரா கொடுத்த பதிலடி:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா உடைய முகம் ரொம்ப அழகாக இருந்தது. ஆனால், இப்போது நிறைய தேவையில்லாத சர்ஜரி மூலம் அசிங்கமாக இருக்கிறார் என்று எல்லாம் உருவகேலி செய்து இருக்கிறார்கள். அதற்கு பவித்ரா, நான் நிறைய வெயிட் குறைத்து இருக்கிறேன். அதனால் தான் என் உடலில் மாற்றம் தெரிகிறது. எளிதாக உண்மை எது என்று தெரியாமல் ஒருவரை பற்றி சொல்லக்கூடாது. நான் சர்ஜரி எல்லாம் செய்யவில்லை. நான் 12 கிலோ வரை உடல் எடை குறைத்து இருக்கிறேன். தயவு செய்து உண்மை தெரியாமல் உங்களுக்கு தோன்றுவதை சொல்லாதீர்கள் என்று பதில் கொடுத்திருக்கிறார்.






