செட்டில் அநாகரீகமாக நடந்து கொண்ட கோமாளி – மீண்டும் பழைய கோமாளியை களமிறக்கி cwc டீம்.

0
970
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கிய நிலையில் அதில் கலந்து கொண்டுள்ள புதிய போட்டியாளர் நீக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது, விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4 :

இப்படி பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சின் சீசன்6 கடந்த 22ஆம் தேதி 105 நாட்கள் மிகவும் பிரம்மாண்டமாக ஓடி நிறைவடைந்தது இதில் அசீம் வெற்றியடைந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் அடுத்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

கலந்து கொண்ட போட்டியாளர்கள் :

ஏனெற்றால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

இவருக்கு பதில் ஆவர் :

இப்படி பட்ட நிலையில் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கிய குக் வித் கோமாளி சீசன்4ல் கலந்து கொண்ட போட்டியாளரான ஓட்டேரி சிவா இந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவருக்கு பதிலாக விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான தங்கதுரை பங்கேற்க உள்ளார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதிர்ப்தியில் ரசிகர்கள் :

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் மொக்க ஜோக் சொல்லி கடுப்படிக்கும் தங்கதுரைக்கு பதிலாக ஓட்டேரி சிவாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தி கிளம்பினாலும் ஓட்டேரி சிவா அதிகமாக நிகழ்ச்சியின் போது குடிப்பதினால் அவரது செயல்பாடுகள் படப்பிடிப்பின் போது சரியாக இல்லை என்றும் கட்டுப்பாடு இல்லாமல் செயல்படும் காரணத்தினால் தான் விஜய் டிவி தொகுப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement