இளைஞர்களின் ரீசன்ட் கிரஷ் அனிதா சம்பத்..! விரைவில் முன்னணி ஹீரோ படத்தில்..!

0
2699
Anitha-sampath

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா.

anitha

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை அனிதா சம்பத் பேசுகையில்நான் முதல்ல நியூஸ் 7-ல் இருந்தப்போ என்னைப் பத்தி எப்போவாச்சும் ஒரு மீம் வரும். அப்ப எல்லாம் என்னைக்கூட மக்கள் கவனிக்கிறாங்களேனு ஹாப்பியா இருக்கும். இப்போ சன் டிவிக்கு வந்ததுக்கு அப்புறம் என்னைப் பற்றி அதிகமா மீம்ஸ் வர ஆரம்பிச்சது. ரீச்சும் அதிகமாச்சு.

எங்கேயாச்சும் என்னுடைய மீமைப் பார்த்தால் என் ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட ஷேர் பண்ணுவாங்க. அதை நானே ஹாப்பியா என்னுடைய வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணுவேன். ஆரம்பத்தில் ஹாப்பியாகத்தான் இருந்துச்சு. ஆனா, வெளியிலெல்லாம் போகும்போது யாருமே என்னை அடையாளம் கண்டு நீங்க அனிதா தானேன்னுலாம் கேட்டதுகூட கிடையாது.

-விளம்பரம்-

ஆனா இப்போ சமீப காலமாக நான் ட்ரெண்டிங்கில் இருக்கேன்னு என் பிரிஎண்ட்ஸ் என்கிட்டே சொன்னப்போ, நான் என்னுடைய போஸ்ட்ட ஷேர் பண்றத நிறுத்திடேன். நாட்கள் செல்ல எனக்கு சர்கார் படத்தில் ஒரு வாய்ப்பும் கிடைத்தது. தற்போது சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கி வரும் சூர்யா37 படத்தில் நடித்து வருகிறேன். ஹீரோயினாக இல்லைங்க ஒரு சின்ன ரோலில் தான் நடித்துள்ளேன். அதே போல 2.0 படத்திலும் ஒரு செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் அனிதா.

Advertisement