பணம் பாக்குற வர பணிவா இருந்தீங்க ஆனா பணத்தைப் பார்த்த பிறகு இப்படி மாரிட்டீங்களே – திவ்யா துரைசாமியின் போஸால் ரசிகர்கள் அப்சட்.

0
6056
divya
- Advertisement -

பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘2.0’, ‘தளபதி’ விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘காப்பான்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது நடிகையாக ‘மாஸ்டர்’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் அனிதா சம்பத். இதில் கதையின் நாயகனாக ‘தளபதி’ விஜய் நடித்திருக்கிறார். இப்படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அனிதா சம்பத் எப்படி செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்தாரோ, அதே போல் இன்னொரு பிரபல செய்தி வாசிப்பாளரும் அந்த ரூட்டை ஃபாலோ செய்யப்போகிறார்.

- Advertisement -

அவர் தான் நம்ம செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா துரைசாமிக்கு, அவங்க ஸ்கூல் படித்து கொண்டிருந்த டைம்லையே டான்ஸ் ஆடுவது தான் ரொம்ப பிடிக்குமாம். படித்து கொண்டிருந்த போது மீடியா துறையில் என்ட்ரியாவோம் என்று நினைத்துக் கூட பார்க்காத திவ்யா துரைசாமி, படித்து முடித்ததும் ஒரு முன்னணி நியூஸ் சேனல்களில் ஒன்றான ‘சன் நியூஸ்’ சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆக நுழைந்து தனது மீடியா பயணத்தை துவங்கியிருக்கிறார்.

அங்கு இரண்டு வருடங்கள் பணியாற்றிய திவ்யா துரைசாமி, அடுத்ததாக சன் டிவியிலும் நியூஸ் வாசிக்கத் தொடங்கினார். அதன் பிறகு சன் நெட்வொர்க்குடன் தனது மீடியா பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த திவ்யா துரைசாமி, அடுத்ததாக தந்தி டிவியில் என்ட்ரியாகி ஒன்றரை வருடம் பணியாற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-

இப்போது புதிய தலைமுறை என்ற சேனலில் நியூஸ் ரீடராக வலம் வருவதோடு, ‘டென்ட் கொட்டாய்’ என்ற சினிமா ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறாராம் திவ்யா துரைசாமி. தற்போது, செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது ஸ்டில்ஸை ஷேர் செய்த வண்ணமிருக்கிறார். இவர் ஷேரிட்ட ஸ்டில்ஸால் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. ஆகையால், விரைவில் இவரை ஹீரோயினாக கூட நடிக்க வைங்க பாஸ் என்று இவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர்.

Advertisement