எதிர்பாராதது சிலருடைய வாழ்க்கையில் நடக்கும் – லைவில் கலங்கிய கண்மணி. (பிந்து ரசிகர்கள் காரணமா ? )

0
730
Kanmani
- Advertisement -

சில வாரமாவே சோசியல் மீடியா முழுவதும் கண்மணி- நவீன் காதல் குறித்த கருத்து தான் அதிகமாக சென்று கொண்டு இருக்கிறது. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு மீடியாவில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நியூஸ் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். அதிலும் இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள்.

-விளம்பரம்-

இதன் மூலம் இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு நிலையில் கண்மணி சீரியல் நடிகர் நவீனை திருமணம் செய்து கொள்ள இருக்கிற தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் தான் நவீன். நடிகர் நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் நவீன் திரைப்பயணம்:

இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அதோடு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டாப் ரேட்டிங்கில் ஒன்றாக இதயத்தை திருடாதே உள்ளது.

-விளம்பரம்-

இதயத்தை திருடாதே சீரியல்:

மேலும், இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் நவீனும், செய்தி வாசிப்பாளர் கண்மணியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் நவீன் குடும்பமும், கண்மணி குடும்பமும் நீண்ட கால நண்பர்களாம். இது காதல் திருமணம் இல்லை இரு வீட்டிலும் பேசி முடிவு செய்யப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தி இருக்கின்றன.

கண்மணி லைவ் வீடியோ:

அதோடு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையுமே அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவிர நவீன், கண்மணிக்காக பாடிய காதல் பாடல் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலானது. இதனால் கண்மணி- நவீன் ஜோடி குறித்து நிறைய பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ் எல்லாம் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு கண்மணி லைவ்வில் சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, எதுனாலும் பேஸ் பண்ணி விடலாம் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்.

ரசிகர்களுக்கு கண்மணி சொன்னது:

என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே எதிர்பாராதது தான். இப்ப வரைக்கும் எதிர்பாராதது தான் நடந்திருக்கிறது. உங்களுடைய சப்போர்ட்டுக்கு நன்றி. நல்லபடியா என் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. சீக்கிரமே அது தொடர்பாக விரைவில் உங்களுக்கு லைவ்வில் எல்லார்கிட்டயும் பகிர்ந்து கொள்கிறேன். ஒருத்தரை கொண்டாறதும் வெறுப்பதும் அவரவர் விருப்பம். பிடித்துப்போய் கொண்டாடும் உங்களுக்கு நன்றி. பிடிக்காத உங்களுக்கு ஓகேன்னு கடந்துடுறேன். எல்லோருக்கும் நன்றி சொல்லனும் நினைச்சேன் சொல்லிட்டேன் என்று கூறியிருந்தார்.

நவீன்-பிந்து குறித்து ரசிகர்கள் கூறியது:

இப்படி கண்மணி லைவ்வில் உணர்வுபூர்வமாக பேசியதற்கு காரணம் பிந்துவும் நவீனும் நிஜ வாழ்க்கையில் ஜோடியாக சேர்வார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கப்பட்டது தான். ஏனென்றால், சீரியலில் இவர்களுடைய ஜோடி அவ்வளவு அருமையாக இருந்ததால் சீரியல் நிஜத்திலும் சேருவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், திடீரென்று நவீன் கண்மணியை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று தெரிந்ததில் இருந்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் நவீனை விமர்சித்து கமெண்டுகளை போட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சீரியல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை நவீனும் பிந்துவும் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறியிருந்தனர்.

Advertisement