விதவிதமா அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்றாங்க’ துணிவு பட நடிகை மெர்சி சித்ரா வேதனை

0
3732
Mercy
- Advertisement -

புதுசு புதுசாக அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்றாங்க என்று அஜித் பட நடிகையும், செய்தி வாசிப்பாளருமான மெர்ச்சி சித்ரா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் செய்தி வாசிப்பாளராக திகழ்பவர் மெர்ச்சி சித்ரா. இவர் நடிகையாகவும் இருக்கிறார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் சித்ரா செய்தி வாசிப்பாளராக நடித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், செய்தி வாசிப்பது ஒன்றும் சுலபமான விஷயம் இல்லை.

-விளம்பரம்-

அதற்காக பயிற்சிகள் எடுக்க வேண்டும். அதற்கு பின் தான் எளிதாக பேச முடியும். எல்லா செய்திகளை பற்றியும் நாம் தெரிந்தால் தான் திடீரென நேரலை வரும்போது அது தொடர்பான கேள்விகளை செய்தியாளர்களிடம் கேட்க முடியும். எந்த செய்தி வாசிப்பாளரும் செய்தி வாசிப்பதோடு வேலையை முடிக்க மாட்டார்க.ள் செய்திக்கான வாய்ஸ் ஓவர் தருவது, ஸ்கிரிப்ட் எழுதுவது என எல்லா வேலையும் செய்ய வேண்டும். அதை நேரில் பார்த்தால் தான் அவர்களுக்கு புரியும். வெளியில் இருந்து கொண்டு விமர்சனம் சுலபமாக செய்துவிடலாம். ஆனால், உண்மையில் அது ரொம்ப கஷ்டமான வேலை.

- Advertisement -

மெர்சி சித்ரா அளித்த பேட்டி:

அதேபோல் நான் சினிமா துறையில் முயற்சித்தேன். அப்போது பல பிரச்சனைகள் அங்கிருப்பது எனக்கு தெரியாது. மீடியாவில் நான் வரும்போது இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால், நான் மீடியாவில் வந்த பிறகு அப்படி எதுவும் இல்லை. தைரியத்துடன் சினிமாவில் நடிக்க பல முயற்சிகள் செய்தேன். பலரும் பலவிதமான எதிர்ப்புகளை கொடுத்தார்கள். சிலர் தங்களுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள். அது மட்டும் இல்லாமல் சிலர் தவறாகவும் பேசினார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் பத்தி சொன்னது:

ஒரு சிலர் இதெல்லாம் செய்தால் தான் உங்களுக்கு வாய்ப்பு தர முடியும் என்றெல்லாம் கூறினார்கள். எனக்கு அது கஷ்டமாக இருந்தது. சினிமாவில் நான் பல கஷ்டங்களை சந்தித்தேன். நான் சந்தித்த எல்லாமே பிரச்சினையாக தான் இருந்தது. நடிக்க வேண்டும் என்று நினைத்தால் இத்தனை பிரச்சனை வருமா என்று ஒரு கட்டத்தில் யோசிக்க ஆரம்பித்தேன். எதற்கு இது தேவையில்லாத வேலை என்று நினைத்து செய்தி வாசிப்பாளர் வேலையை ஒழுங்காக பார்ப்போம் என்று நினைத்தேன்.

-விளம்பரம்-

துணிவு பட வாய்ப்பு:

சிலர் மறைமுகமாகவும் சிலர் நேரடியாகவும் அட்ஜ்ஸ்ட்மென்ட் கேட்டார்கள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு போட்டோவில் பளிச் என்று இருக்கீங்க, நேரில் கருப்பா இருக்கீங்க என்றும் விமர்சித்தார்கள். பல முயற்சிக்கு பிறகு தான் எனக்கு அஜித் சாரோட நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. முதலில் என்னிடம் சொல்லும் போது நீங்கள் தான் மெயின் ரிப்போட்டர் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் பத்தில் நானும் ஒருத்தி என்று தெரிந்தது காலை 9 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை வெயிலில் நிற்போம்.

அஜித் குறித்து சொன்னது:

மே மாதத்தில் தினமும் மேக்கப் போட்டு சூட் முடிந்து சென்னை வரும் போது தீஞ்சு போய் தான் வந்தேன். அஜித் சார் படத்தில் நடிக்கிறோம் என்று மனதை தேற்றிக்கொண்டேன். ஒரு கட்டத்தில் இவ்வளவு வெயிலில் நடிக்க வேண்டுமா என்று எனக்குள் தோன்றியது. கஷ்டப்பட்டு எப்படியோ நடித்து கொடுத்து விட்டோம். அஜித் சாருக்காக நான் எல்லாம் செய்தேன். நான் சந்தித்து அவருடன் போட்டோ எல்லாம் எடுத்தேன். அவருடன் சேர்ந்தும் சாப்பிட்டேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்

Advertisement