கட திறப்பு விழானு, 1 லட்சம் தரேன்னு கூப்டுட்டு, N*** கால் பண்ண சொல்ராங்க – வெளுத்து வாங்கிய பனிமலர்.

0
28771
panimalar

செய்திவாசிப்பாளர் பனிமலர் அவர்கள் உன் அம்மாவிடம் இருக்கிறது தான் எனக்கும் இருக்கிறது என்று ஆவேசமாக கொந்தளித்து பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. செய்திவாசிப்பாளர் பனிமலர் கோவையில் சேர்ந்தவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் உள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் தான் தன்னுடைய பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் பாலிமர், புதிய தலைமுறை, நியூஸ் செவன் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இதுதவிர இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் நபர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள் சர்ச் என பல சமூக வலைத்தளங்களில் இவர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பனிமலர் அவர்கள் தன்னிடம் தரைகுறைவாக சமூகவலைத்தளங்களில் வீடியோவில் பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, சமூக வலைத்தளங்களில் நேரடியாக வீடியோவில் பேசி வரும் சிலர் ஆபாசமாக உன்னை பார்க்கவேண்டும் என்று கேட்ட அந்த மிருகங்களுக்கு தான் நான் இதைச் சொல்கிறேன். இது என்னை போன்று பாதிக்கப்பட்ட பல பெண்களின் சார்பாக பதிவிட்டு இருக்கிறேன். உன் அம்மா, அக்கா, உன் வீட்டுப் பெண்கள் இடம் இருப்பது தான் அனைத்து பெண்களிடம் உள்ளது. நீ மற்ற பெண்களை கேவலமாக பேசுவதுபோல் தான் உன்னுடைய வீட்டு பெண்களையும் பிறர் பேசுவார்கள் என்று மறந்துவிடாதே. பொதுவெளியில் குறைந்தபட்ச நாகரிகத்தோடு பேசுவதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

This image has an empty alt attribute; its file name is Panimalar-2.jpg

உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களைப் போலவே மற்ற பெண்களையும் நினையுங்கள். நான் கஷ்டப்பட்டு செய்தி வாசித்து தான் பணம் சம்பாதிக்கிறேன். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகிறேன். ஆனால், நீ எந்த வேலையும் பார்க்காமல் பெண்களை தரக்குறைவாக பேசுவது ஒன்றை மட்டுமே வேலையாக பார்த்து வருகிறார். உன்னை எல்லாம் ஒரு மனிதனாக கூட மதிக்க முடியாது. பெண்கள் பயந்து ஒளிந்த காலம் மாறிவிட்டது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு புகார் அளித்தால் போதும் பெண்களுக்கு என்று பாதுகாப்பு அளிப்பதற்கு பல சட்டங்கள் இருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு காவல்துறையில் ஒரு புகார் அளித்தால் போதும் அடுத்த சில மணிநேரங்களில் உன்னை கைது செய்து முடியும். ஆனால், உன்னை எல்லாம் ஒரு மனிதனாகவே அல்லது புழு பூச்சியாகவோ கூட நினைக்க வில்லை. அதனால் தான் நான் புகார் அளிக்க விருப்பமில்லை. ஆனால், உங்களை போன்ற கொடிய மிருகங்கள் எல்லை மீறிப் பேசினால் கண்டிப்பாக நான் புகார் அளிக்க தயங்க மாட்டேன் என்று கொந்தளித்து ஆவேசமாகப் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பனிமலர் இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த வீடியோவின் இறுதியில் ஒருவர் உங்கள் பிரா ஸ்ட்ராப் தெரிகிறது என்று காமெண்ட் செய்தார். இதனால் கடுப்பான பனிமலர் ‘ஆமாம் ப்ரா தெரியுது தான் அதுக்கு என்ன இப்போ. எல்லாரும் போடுவது தானே. உங்கள் வீட்டில் யாரும் போடுவது கிடையாதா. இப்படி என்னிடம் கேட்பதை விட்டுவிட்டு உங்கள் அம்மா அக்கா தங்கச்சி யாரிடமாவது கேளுங்கள் போய் வேலையை பாரு என்று திட்டித் தீர்த்திருக்கிறார்.

Advertisement