Ngk படம் புரியலையா.! இத பாருங்க.! படத்துல இதெல்லாம் கவனீசீங்களா.!

By Rajkumar · 2/6/2019

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'Ngk' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. வருட காத்திருப்பிற்கு வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

https://twitter.com/LMKMovieManiac/status/1134693191511232512

சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தினை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலும் பொதுவான ரசிகர்களை இந்த படம் கவரவில்லை. மேலும், இந்த படம் சரியாக புரியவில்லை என்று சொன்ன ரசிகர்களுக்கும் இயக்குனர் செல்வராகவன் ட்வீட் மூலம் பதிலளித்திருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த தொகுப்பாளர்.! விடியோவை வெளியிட்ட விஜய் டிவி.!

அதில், என்.ஜி.கே. படத்துக்கான பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. உங்களில் சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள் மறைந்துள்ளன. படத்தை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவற்றை எளிதில் கண்டுகொள்ளலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/Aashiik2/status/1134693441361723392

https://twitter.com/Localboyvinoth/status/1134722339776499712

அதற்கு பல ரசிகர்களும் இந்த படத்தின் ஒளிந்திருக்கும் ரகசியங்களை பதிவிட்டுள்ளனர். அதில் முதல் பாதியில் சூர்யா நல்லவராகவும் இரண்டாம் பாதியில் கெட்டவராகவும் மாறிவிடுகிறார் என்றும், அவரது பெற்றோர் மற்றும் மனைவியை தனது அரசியல் காரணத்திற்காக கொன்று விடுகிறார். ஆனால், ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவியை காப்பாற்றி விடுகிறார்.

https://twitter.com/TheSingleLion2/status/1134709733292535808

மேலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா சேகுவேரா கேட்டப்பில் இருந்தார். அந்த ரெபரென்ஸ் படத்தில் சேகுவேராவை போன்று சூர்யா இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் ஒரு போராளியாக இருக்கிறார். இவ்வாறு பல தகவல்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full