பிரியங்கா அழகி பட்டம் வாங்கிய போது 7 வயது சிறுவனாக தன் தந்தையுடன் பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ்

0
3497
- Advertisement -

பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்ற போது அவருடைய கணவரின் வயது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார் பிரியங்கா சோப்ரா.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

- Advertisement -

பிரியங்கா சோப்ரா திருமணம்:

இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின் படியும் திருமணம் செய்து கொண்டார்கள். பிரியங்கா சோப்ரா இந்துமதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதோடு பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர்.

பிரியங்கா சோப்ரா கணவர் குறித்த தகவல்:

இதனால் இவர்களின் திருமணம் குறித்து பலரால் பலவிதமாக பேசப்பட்டு இருந்தது. ஆனால், அதை இருவருமே கண்டுக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு தான் வாடகை தாய் மூலம் இவர்கள் பெண் குழந்தையை பெற்று இருக்கிறார்கள். சமீபத்தில் தன் மகளுக்கு மால்டி மேரி என பெயர் வைத்தார்கள். பின் முதன் முறையாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் பிரியங்கா சோப்ரா. இருந்தாலும், பிரியங்கா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

பிரியங்கா சோப்ரா நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் புதிய வெப் சீரிஸ் சிட்டாடல். இந்த வெப் சீரீஸ் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புது அத்தியாயங்களுடன் இந்த வெப் சீரிஸ் வெளியாகி வருகிறது. இதனை அடுத்து இவர் லவ் அகைன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் இவருடைய கணவர் நிக் ஜோனாஸும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய கணவர் குறித்து கூறியிருந்தது, நான் உலக அழகி பட்டம் வென்ற போது எனக்கு 17 வயது. அப்போது என்னுடைய கணவருக்கு ஏழு வயது நான். அந்த உலக அழகி போட்டியை பார்க்க என்னுடைய கணவர் நிக் அவருடைய தந்தையுடன் வந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய மாமியார் தான் இதை என்னிடம் கூறியிருக்கிறார்.

Advertisement