நிக்கி கல்ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா ஜீவா..!இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிக்கி கல்ராணி..!

0
627

கடந்த சில மாதங்களாக மீடூ விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொஞ்சம் காலமாக இந்த விவகாரம் ஓய்ந்த நிலையில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஜீவா பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற செய்தி தீயாக பரவியது.

nikkigalrani

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் கொரில்லா. இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். மேலும், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி மற்றும் பலர் நடிக்கிறனர்.

இந்த படத்தில் முதன் முதலில் நிக்கி கல்ராணி தான் நடிக்க இருப்பதாக இருந்தது பின்னர் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணமே ஜீவாவுடன் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்த பொது நிக்கி கல்ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிக்கி கல்ராணி, நடிகர் ஜீவா எனது சிறந்த நண்பர், கொரில்லா படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. சில வேலை இல்லாத நபர்கள் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்பி விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.