விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

Boycott விஜய் டிவி :

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

Advertisement

அதே போல பொதுவாக வெற்றியாளரை தான் முதலில் பேச வைப்பார்கள். ஆனால், அஸீமிடன் கோப்பையை கொடுத்துவிட்டு கமல், விக்ரமனை தான் முதலில் பேச வைத்தார். இதையெல்லாம் காரணமாக சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமலுக்கே அசீம் வென்றது பிடிக்கவில்லை என்பது போல கூறி வருகின்றனர்.இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது.

டைட்டிலை வென்ற அசீம் :

அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார். விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வன்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

Advertisement

பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாத போட்டியாளர் :

இப்படி பட்ட நிலையில் மற்ற சீசன்களை போல இந்த சீசனும் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்க்கையும் அழைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நிவாஷினி மட்டும் வரவில்லை அவர் வராததற்காக காரணம் தெரியவில்லை. இருந்தாலும் இந்த விஷியத்திற்கு பட வாய்ப்பு காரணமாக இருக்கக் கூடும் என்று கூறப்டுகிறது. நிவாஷினி மலேசிய மாடல் அழகி என்பதும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சில சர்ச்சைகளில் இவரும் அசல் கோளாறும் சிக்கினார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

Advertisement
Advertisement