என்னது இவ்ளோ ஸ்பீட்ல போனீங்களா – நிவேதா பெத்துராஜ் சொன்ன ஷாக்கிங் பதில் (இது நம்பர மாதிரியா இருக்கு)

0
6680
Nivetha
- Advertisement -

ஒரே ஒரு முறை பார்முலா காரை ஒட்டிவிட்டு தன்னை ஒரு லேடி அஜித் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவையும் தாண்டி இவருக்கு பைக், ரேஸ் கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும், இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும்.

-விளம்பரம்-

அஜித்தை ரோல் மாடலாக வைத்து பல நடிகர் நடிகைகள் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்ட ஆசைபட்டு கூட இருக்கின்றனர். ஆனால், நடிகைகளை பொறுத்த வரை பொதுவாக ஸ்போர்ட்ஸ் பைக்கை ஒட்டி தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், முதல் முறையாக அஜித்துக்கு பின் பார்முலா ரேஸ் காரை ஓட்டிய பெருமையை பெற்று இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

- Advertisement -

நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் மதுரையை சேர்ந்த பக்கா தமிழ் பெண். இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

பார்முலா ரேஸ் காரை பார்முலா ட்ராக்கில் ஒட்டி பழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்து இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த நிவேதா பேத்ராஜிடம், எவ்வளவு வேகத்தில் கார் ஓடுவீர்கள் என்று கேட்டதர்க்கு ஆன் டிராக்கில் 180 போய்இருக்கேன். ஆப் டிராக்கில் 264 கி மீ வேகத்தில் போய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஒரு பார்முலா காரை தேர்ச்சி பெற்ற ரேசர் சராசரியாக 234 கி மீ வேகத்தில் தான் ஓட்டுவார்கள். ஆனால், ஒரே ஒரு முறை ஒட்டிவிட்டு 264 கி மீ வேகத்தில் செல்வேன் என்று நிவேதா கூறியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. அதே போல அஜித் ரேஸ் ஓட்டுவது குறித்து ரசிகர் கேட்டதற்கு நான் அவர் ரேஸ் ஓட்டி பார்த்திருக்கிறேன். அவர் பார்முலா 2வுக்கு சென்று இருப்பது எல்லாம் பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.

Advertisement