வெட்கத்தை விட்டு சொல்கிறேன் சிறு வயதில் எனக்கு அந்த கேட்ட பழக்கம் இருந்தது - நிவேதா பெத்துராஜ்.

By Rajkumar · 9/12/2019

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது இவர் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமாக இதை ஷேர் செய்தும்,லைக் செய்தும் வருகிறார்கள். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக நடிகைளில் ஒருவர் ஆவார். ஏனென்றால் சமூக வலைத்தளங்களின் மூலம் ரசிகர்களுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் ரசிகர்களுடன் அப்பப்ப சாட் செய்வதும் வழக்கமான ஒன்றாக வைத்து உள்ளார்.

இதையும் பாருங்க : இந்த நடிகரை காதலராக ஏற்றுக்கொள்வேன். மிர்னாலினி அளித்த ஓபன் பேட்டி.

அந்த வகையில் ஒரு சில பேர் உங்களுடைய சிறு வயதில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு அதில் அவர் கூறியது, நான் வெக்கத்தை விட்டு சொல்கிறேன், சிறு வயதில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அது என்னன்னா ஸ்கூலில் இருந்து சாக் பீஸை திருடி வந்து விடுவேன். அதை வைத்து என் அம்மாவை கோலம் போட சொல்வேன். அதுமட்டும் இல்லாமல் சிறு வயதில் பவர் கட்டாகி விட்டால் டார்ச் லைட் அடித்து அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறுவர்களை பயமுறுத்துவேன் என்று வெகுளித்தனமான விஷயங்களை எல்லாம் கூறி உள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் சற்று அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள். நமக்கு பிடித்த ரசிகர்களின் ஏதாவது ஒரு விஷயம் தெரிந்தால் சும்மா இருப்போமா!! அதை ஊருக்கே தெரிகிற அளவுக்கு பண்ணிடமாட்டோம். அந்த அளவிற்கு தான் ரசிகர்கள் நடிகை நிவேதாவின் சிறு வயது நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full