இந்த நடிகரை காதலராக ஏற்றுக்கொள்வேன். மிர்னாலினி அளித்த ஓபன் பேட்டி.

0
27757
Mirnalini
- Advertisement -

தற்போது வரும் காலகட்டங்களில் சோசியல் மீடியா என்பது நடைமுறை பழக்கங்களில் ஒன்றாக மாறி விட்டது. முன்னரெல்லாம் சினிமா துறைகளில் நடிகர்களை நேரடியாக தான் நேர்காணல் வைத்து தேர்வு செய்வார்கள். ஆனால், தற்போது சோசியல் மீடியாக்களில் வெளியிடப்படும் வீடியோக்கள் மூலம் தான் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் வந்தவர் தான் சூப்பர் டீலக்ஸ் நடிகை மிர்ணாளினி ரவி . சமூக வலைத்தளங்களில் டப்ஸ்மாஷ் வீடியோகளின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை மிர்ணாளினி ரவி . சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த நியூஸ் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
miranalini க்கான பட முடிவு

- Advertisement -

மிர்ணாளினி ரவி அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் பொறியியல் படிப்பு முடித்தது மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இவர் புகைப்படம் எடுப்பது, டப்ஸ்மாஷ், டிக் டாக் வீடியோக்கள் என அனைத்தும் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு பெற்றார். அதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைத்தது என்றும் சொல்லலாம். அப்படித் தான் தியாகராஜன் குமாரராஜா அவர்களின் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த “சூப்பர் டீலக்ஸ்” என்ற படத்தில் நடிக்க இவரை தேர்வு செய்தார்கள்.

இதையும் பாருங்க : ஈஸ்வர்-மஹாலட்சுமி விவகாரம். புலம்பி தள்ளிய மஹாலக்ஷ்மியின் கணவர். இவர் என்ன புது குண்ட போடுறாரு.

மேலும், இந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மிர்ணாளினி ரவி நடித்து இருந்தார். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் ஆகும். மேலும், இந்த படத்தை தெலுங்கில் “வால்மீகி” என்ற பெயரில் ரீமேக் செய்ய உள்ளார்கள். தெலுங்கில் இந்த படத்தில் அதர்வா நடிக்க உள்ளார். அதோடு இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மிர்ணாளினி ரவி நடிக்கிறார் என்று தெரிய வந்து உள்ளது. இப்படி போய்க் கொண்டிருக்கும் போது இவர் பிரபல மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்து உள்ளார்.

-விளம்பரம்-
vijay ajith surya க்கான பட முடிவு

அதில் அவர்கள் விஜய், அஜித் ,சூர்யா இவர்களில் யாரை நண்பனாக, சகோதரராக, காதலராக ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை மிர்ணாளினி ரவி கூறியது, தளபதி விஜயை நண்பனாகவும், தல அஜித்தை சகோதரனாகவும், சூர்யாவை காதலனாகவும் ஏற்றுக் கொள்வேன். அதோடு நண்பன் எப்ப வேண்டுமானாலும் காதலன் ஆகலாம் என்று கூறினார். இப்படி மிர்ணாளினி ரவி கூறிய வார்த்தை அங்கு உள்ளவர்களை மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் அதிர வைத்தது என்று சொல்லலாம்.

அடுத்தபடியாக தமிழில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்து வரும் படம் எம்.ஜி.ஆர். மகன். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக டிக்டாக் ராணி மிர்ணாளினி ரவி நடித்து உள்ளார். மேலும், இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சமுத்திரகனி, சிங்கம் புலி ஆகியோர் பல பேர் நடித்து வருகின்றனர். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளிவரும் என்றும் அறிவித்து உள்ளார்கள். மேலும், சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

Advertisement