ஓராண்டிற்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக வந்த நிவேதா தாமஸ்..!ஆனால், 50 வயது நடிகருடன்..!புலம்பும் ரசிகர்கள்..!

0
874
Nivetha-thamos
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் விஜயின் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.

-விளம்பரம்-

ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்தார். பின்னர் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் அனைத்து முன்னணி நாயகிகளுடன் நடித்துவிட்டார்.

- Advertisement -

ஆனால், இந்த ஆண்டு தனது படிப்பை முடிக்க வேண்டும் என்று எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் நடிகை நிவேதா தாமஸ். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜா நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

நிவேதா தாமஸுக்கு தற்போது தான் 22 வயது, ஆனால் ரவி தேஜாவுக்கு 50 வயது. இதனால் 50 வயது நடிகருடன் நிவேதா தாமஸ் டூயட் பாடி ரொமான்ஸ் செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால், இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தான் தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனேவே ரவி தேஜாவுடன் இனைந்து நடிக்க இயக்குனர் நிவேதா தாமஸை அணுகிய போது அவருடன் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார் நிவேதா தாமஸ்.

-விளம்பரம்-
Advertisement