அந்த இரண்டு செகண்ட் காட்சிக்காக, 2 பிளைட் புடிச்சி, ஒரு நைட் புல்லா கண்ணு முழிச்சேன். நிவேதா தாமஸ் சொன்ன தகவல்.

By Rajkumar · 26/1/2020

சன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். அதன் பின்னர் மை டியர் பூதம் தொடரிலும் நடித்திருந்தார். தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்த நிவேதா தாமஸ் விஜய் நடிப்பில் வெளியான 'குருவி' படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் நடத்த நிவேதா தாமஸ் பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார்.

https://twitter.com/i_nivethathomas/status/1219559001341353984

பாபநாசம் படத்துக்குப் பின்னர் இவருக்கு தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.ஆனால், ஜாக்பாட் அடித்தது போல சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் படத்தில் இவருக்கு சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் இந்த படத்தில் நயன்தாராவை விட இவர்தான் சூப்பர் ஸ்டாருடன் அதிக காட்சிகளில் தோன்றி இருந்தார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'டும் டும்' பாடலுக்காக இவர் மேற்கொண்ட முயற்சி குறித்து ட்வீட் செய்துள்ளார்.

இதையும் பாருங்க : நான் மிஸ் செஞ்சதாள இப்போ அவங்க ஒரு குடும்பமா ஆகிட்டாங்க. நயன் -விக்கி குறித்து பேசிய நடிகை.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், படத்தில் இரண்டு நொடிகள் மட்டுமே வரும் காட்சிக்காக இரண்டு விமானங்களை பிடித்து இரவு பகலாக வேலை செய்திருக்கிறேன் படம் எடுப்பது என்பது கடினமான வேலை அதை உருவாக்குவது எண்ணி உற்சாகம் கொண்டு தன்மையாக இருக்க வேண்டும் நீங்கள் பகிரும் ஒவ்வொரு வார்த்தைகளும் முக்கியமானது என்று பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ். மேலும், தர்பார் படத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் பதவிட்டுள்ளார்.

தர்பார் படத்தைத் தொடர்ந்து தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்ததுஅரசியலுக்காகத் திரையுலகில் இருந்து ஒதுங்கிய பவன் கல்யாண், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் நுழையகிறார். மிக முக்கியமான தாப்ஸி கதாபாத்திரத்தில் நடிக்க நிவேதா தாமஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு என்று செய்திகள் வெளியானது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full