தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவே பொறாமை படும் காதல் ஜோடியாக இருந்து வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது.
ஆனால் அடுத்த சில நாளே நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விக்னேஷ் சிவன். தற்போது இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் எதிர் பார்த்து வருகின்றனர். அதே போல நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் ‘நானும் ரௌடி தான் ‘ படத்தின் போது தான் பற்றிக்கொண்டது என்றும் கூறப்படும் நிலையில் நானும் ரௌடி தான் படத்தில் முதலில் நான் தான் நடிக்க வேண்டியது என்று பிரபல நடிகையான அமலா பால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : அந்நியனுக்கு பின்னர் பொன்னியின் செல்வனுக்காக மீண்டும் முடியை வளர்க்கும் விக்ரம்.
இந்தப் பேட்டியின் போது நடிகை அமலாபாலிடம் நீங்கள் இந்த படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்று எப்போதாவது பீல் செய்திருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த நடிகை அமலாபால் அப்படி எதுவும் கிடையாது ஏனென்றால் நான் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இப்போது புரிகிறது நான் மிஸ் செய்த படங்கள் ஏன் மிஸ் செய்தேன் என்று ஏனென்றால் அவையெல்லாம் வேறு ஒரு ஆளுக்கு பயனாக இருந்திருக்கிறது அதனால் இது போன்ற விஷயங்களை தற்போது என்னால் திரும்பி பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார்.
வீடியோவில் 10:52 நிமிடத்தில் பார்க்கவும்
தொடர்ந்து பேசிய நடிகை அமலாபால் நானும் ரவுடிதான் கதையும் முதலில் நான்தான் செய்வதாக இருந்தது ஆனால் அப்போது என்னுடைய திருமணம் வேலைகள் நடைபெற்றதால் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. ஆனால், என்னை விட நயன்தாரா மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். தற்போது அவர்கள் இருவரும் (விக்கி – நயன்)ஒரு குடும்பமாக மாறிவிட்டார்கள். எனவே, அனைத்தும் நல்லதுக்கு தான் நடக்கிறது என்று கூறியுள்ளார் அமலா பால். ஆடை படத்திற்கு பின்னர் நடிகை அமலாபால் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.