சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நிவேதா தாமஸ். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் இவர் கடைசியாக தர்பார் படத்திலும் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற படத்திலும் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் மாட்டுப் பண்ணைக்கு சென்று வந்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

நிவேதா தாமஸ் அவர்கள் மாட்டுப் பண்ணைக்கு சென்று அங்கிருக்கும் ஒரு மாட்டில் பால் கறந்து பின்பு அதை காபியில் போட்டு குடித்த அனுபவத்தை வீடியோவாக எடுத்து உள்ளார். பின் அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி என்று பதிவிட்டு உள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை கொடுத்து இருந்தாலும் சில சமூக ஆர்வலர்கள் நிவேதாவை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : சந்திரமுகி படத்தில் வந்த பொம்மிய ஞாபகம் இருக்கா ? அவருக்கு திருமணம் முடிந்தது. இதோ புகைப்படம்.

Advertisement

அதில் தீப்ஸி என்கிற விலங்குகள் நல ஆர்வலர் கூறியது, நிவேதா ஒரு பெண்ணியவாதியாக இருப்பதால் இப்படி பால் கறப்பதற்கு பதிலாக சங்கிலியால் பூட்டப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று நினைத்தோம். ஒரு பெண்ணாக இருந்து இன்னொரு இனத்தை சேர்ந்த பெண்ணை அவர் வதைக்கிறார் என்பது மோசமான செயல் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து மற்றொரு விலங்குகள் நல ஆர்வலர் கூறியது, காலநிலை மாற்றத்திற்கு இப்படியான பால் பண்ணை, மாட்டு இறைச்சி உற்பத்தி துறை காரணமாக இருக்கின்றன. இவைகள் எல்லாம் மனித சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இப்படி சோசியல் மீடியாவில் பலதரப்பு சமூக ஆர்வலர்கள் பதிவை குறித்து நிவேதா இன்னும் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

Advertisement
Advertisement