‘உங்க அப்பா Pan விளமபரத்துல நடிச்ச காசா’ – குடித்துவிட்டு குளம்மாளம் போட்ட அஜய் தேவ்கன் மகளை கேலி செய்யும் நெட்டிசன்கள்.

0
469
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகரின் மகள் குடிபோதையில் குத்தாட்டம் போட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா நடிகர்கள் எது செய்தாலும் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்படுகிறது. நல்லது, கெட்டது எதுவென்றாலும் பிரபலங்கள் பற்றிய சின்ன தகவல் வெளிவந்தாலும் போதும் அதை வைரலாகி விடுகிறது. அதிலும் பிரபல நடிகர்களின் வாரிசுகள் ஏதாவது செய்தால் போதும் அது மிகப் பெரிய சர்ச்சையாக மாறுகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான்- கஜோல் ஆகியோரின் மகள் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர்களாக திகழ்பவர்கள் அஜய்தேவ் கான்- கஜோல். அஜய் தேவ்கன் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

அஜய் தேவ்கான்- கஜோல் குடும்பம்:

பின் இவர் 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை கஜோலை திருமணம் செய்து கொண்டார். கஜோலும் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்த வருகிறார். இவர் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. நைசா தேவ்கான் என்ற மகளும், யுக் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

ஆட்டம் போட்ட நடிகரின் மகள்:

இந்த நிலையில் அஜய்தேவ் கான்- கஜோல் ஆகியோரின் மகள் நைசா தேவ்கான் குடிபோதையில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுகிறார். அதாவது, வெளிநாட்டில் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்ற இவர் குடிபோதையில் செம ஆட்டம் போட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அஜய் தேவ்கான்- கஜோல் ஆகியோரின் மகளை கடுமையாக திட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-

பிரபலங்கள் நடித்த விளம்பரம்:

அதிலும் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலர் ‘உங்க அப்பா Pan விளம்பரத்துல நடிச்ச காசா’ என்று கேலி செய்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் ஆகியோர் சமீபத்தில் தனியார் நிறுவனத்தின் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தனர். இது பெரும் சோசியல் மீடியாவில் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது.

பிரபலங்களின் விளம்பர சர்ச்சை:

இதனால் நடிகர் அஜய் தேவ்கன் இவ்விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். மேலும், அந்த நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் அஜய் தேவ்கான் ரத்து செய்தார். இப்படி ஒரு நிலையில் அஜய் தேவ்கான் மகள் செய்த செயல் குறித்து பலரும் கிண்டல் செய்கின்றனர்.

Advertisement