விஜய் சேத்துபதி படங்களை தவிர பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அது இவருக்கு சொந்தமாக இறைவி என்ற துணிக்கடையையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் ‘மண்டி ‘ என்ற விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டால் பலசரக்கு வியாபாரம் செய்பவர்கள் பாதிப்படைவார்கள். சிறுகச் சிறுக மளிகை வியாபாரம் முற்றிலும் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்று வியாபாரிகள் கடுமையாக இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், தனியார் ஆன்லைன் வர்த்தகத்தின் விளம்பரத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு எதிராக “தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு” சார்பாக கடந்த வாரம் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், இதுகுறித்து வணிகர்கள் சங்க பேரமைப்பை அமைப்பினர் தரப்பில் இருந்து பேசிய போது தமிழ்நாட்டில் 21 லச்சத்திறகும் மேலான சிறு குறு வணிகர்கள் இருக்கிறோம். விஜய் சேதுபதி எங்கள் வாழ்வாதரத்தை பறிக்கும் வகையில் துரோகம் செய்கிறார். அவரது படங்களை வணிகர் சங்கங்கள் புறக்கணிப்போம்.எங்கள் வாழ்வாதாரத்தை முடக்குவது போல அவரது சினிமாவையும் முடக்குவோம்.

இதையும் பாருங்க : குழந்தை பிறப்பிற்கு பின் ஆளே மாறிய வனிதா சகோதரி ஸ்ரீதேவி.

Advertisement

மேலும், ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வணிகர் சங்க பேரமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 வணிகர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் அடைத்திருந்தனர். இப்படிபட்ட நிலையில் விஜய் சேதுபதி ‘மண்டி’ விளம்பரத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி என்ன கேட்டார் என்பதை மண்டி நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில்.

விஜய் சேதுபதி ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளுமுன் பலநூறு முறை யோசிக்கிறவர். அவருக்கே இந்த மண்டி குறித்து 1,000 கேள்விகள்இருந்தது. இப்போ அவங்க கேக்குற எல்லா கேள்வியையும் அவரும் கேட்டார். மேலும், மக்கள் சார்பில்தான் அவர் பல சந்தேகங்களைக் கேட்டார். மேலும் மண்டி ஒன்றும் வெளிநாட்டு நிறுவனம்கிடையாது. சேலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 40 வருடங்களாக இந்தத் தொழிலில் இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்த ஒருவருடையதுதான். இது நேரடியாக விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பலனளிக்கும் திட்டம்தான் இது. மேலும், இதுகுறித்து விஜய் சேதுபதியுடன் எங்கள் நிறுவனம் சார்பில் பேசி முறையான விளக்கம் அளிப்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement