குழந்தை பிறப்பிற்கு பின் ஆளே மாறிய வனிதா சகோதரி ஸ்ரீதேவி.

0
130224
sridevi
- Advertisement -

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஏன்னா, இவர்அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலம். மேலும்,இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் –குஷ்பூ நடிப்பில் வெளிவந்த படம் ‘ரிக்சா மாமா’. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ஸ்ரீதேவி விஜயகுமார். இந்த ஒரு படத்திலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இதற்கு பிறகு அவர் வளர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும்,இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வேற யாரும் இல்லைங்க, சினிமா துறையில் முன்னணி நடிகர்களான நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் கடைக்குட்டி மகள் ஆகும்.

-விளம்பரம்-
அழகே அழகே...

இவருக்கு ஏற்கனவே நடிகை வனிதா,நடிகை ப்ரீதா என இரு சகோதரிகளும்,நடிகர் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள். ஆகவே நடிகை ஸ்ரீதேவியின் ஒட்டுமொத்த நபர்களும் சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் அதற்கு பிறகு பிரியமான தோழி, தேவதையைக் கண்டேன், தித்திக்குதே என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்தது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளி வந்த தேவதையை கண்டேன் படத்தில் தான். அதற்கு பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.

- Advertisement -

மேலும்,இந்த புகைப்படங்களைப் பார்த்து இவர் படத்தில் நடிப்பதற்கான பட வாய்ப்புகள் கேட்க உள்ளார் என்ற பல வதந்திகளையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும்,நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அவர்கள் 2009 ஆம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தமிழில் தேவதையைக் கண்டேன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டும் ஒரு சில படங்களில் நடித்து வந்திருந்தார். பின்னர் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் 2016 ஆம் ஆண்டு ‘லக்ஷ்மணா’ என்கிற கன்னட படத்தில் மீண்டும் நடித்தார்.

ஷாட் உடையில் செம்ம கியூட்
பட்டு புடவையில் ஸ்ரீதேவி
மாடர்ன் பெண்ணே..

தற்போது படத்தில் சிறந்த கதாபாத்திரம் அமைந்தால் தமிழிலும் நடிக்கலாம் என்கிற எண்ணத்தில் ஸ்ரீதேவி அவர்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால்,நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சினிமா துறையில் நடிப்பதற்காக தீவிரமாக எந்த ஒரு பட வாய்ப்புகளை தேடாவிட்டாலும், அவர் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், விதவிதமான ஆடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் இணையங்களில் பகிர்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் அந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு வியப்பூட்டும் வகையில் உள்ளது என்றும் நெட்டிசன்கள் அவர் கூறி வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரீதேவி அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்து உள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்படி அம்மா ஆன பிறகும் இவ்வளவு அழகுடன் இருக்கும் ஸ்ரீதேவி குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், திரையுலகை சேர்ந்த ஒரு சில பேர் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் பக்கா ப்ளான் போட்டு தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் கிசுகிசுத்தும் வருகின்றனர். உண்மையில் நடிகை ஸ்ரீதேவி சினிமா உலகிற்கு படத்தில் நடிப்பதற்காக இப்படி பண்ணுகிறாரா? இல்ல பேஷன்காக செய்கிறாரா? என அவரே சொன்னால் தான் தெரியும் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement