செந்தில் வடிவேலுவுடன் நடித்த விசித்திரா.! இவங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்களா.!

By Rajkumar · 6/5/2019

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கௌண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் படங்களில் பெண் காமெடியன்களாக நடித்து பிரபமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர்.

ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க : சூர்யாவின் காக்க காக்க 2 உருவாகிறது.! ஹீரோ யார் தெரியுமா.! ரசிகர்கள் ஷாக்.! 

இறுதியாக 2002 ஆம் ஆண்டு வெளியான இறுதி பாடகன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி கணவர் பிள்ளைகள் என்று செட்டில் ஆகிவிட்டார். இருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இருக்கிறது.

அதில் மூத்த மகன் 11 ஆம் வகுப்பு படிக்கிறார். மேலும், அடுத்து இரண்டு மகன்களும் ட்வின்ஸ் அவர்கள் இருவரும் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தனது கணவரின் ஹோட்டல் தொழிலை உடன் இருந்து கவனித்து வருகிறார் விசித்திரா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full