சூர்யாவின் காக்க காக்க 2 உருவாகிறது.! ஹீரோ யார் தெரியுமா.! ரசிகர்கள் ஷாக்.!

0
800
Kakka-Kakka-2

தமிழ் சினிமாவின் ஸ்டார் தம்பதியர்களான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு முன்பாகவே பல படங்களில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

Image result for kakka kakka

அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து போவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்கா காக்க, மாயாவி, பேரழகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளனர். இதில் காக்க காக்க படம் தான் மற்ற படங்களை விட மாபெரும் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்க : இந்த ஹீரோக்கள் தான் சில்க் ஸ்மிதவை நாசமாக்கினார்.! சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி.! 

- Advertisement -

கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தனது முதல் போலீஸ் படத்திலேயே ஹிட் கொடுத்தார் சூர்யா. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

Image result for vishal goutham menon

இரண்டாம் பாகத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது அடுத்தடுத்து படத்தில் நடித்து வருவதால் காக்க காக்க 2 படத்தில் சூர்யாவால் நடிக்க முடியவில்லையாம். மேலும், இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement