திருமணம் வரை சென்றதா சித் – சமந்தா காதல். வைரலன பழைய புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை.

0
398
samantha
- Advertisement -

சமந்தா – சித்தார்த்தின் திருமண பூஜை புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்கள். இதனால் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகும் தங்களுடைய கேரியரில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காத்துவாக்குல 2 காதல்.

சமந்தா நடிக்கும் படங்கள்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், யசோதா, குஷி, சாகுந்தலம், ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இந்த படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சமந்தா அவர்கள் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பற்றி பல விஷயங்களை கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சமந்தா- சித்தார்த் இடையேயான காதல்:

அதோடு இருவரும் திருமணத்திற்கு பின் சேர்ந்து வாழ்ந்த வீட்டை சமந்தா பெரிய தொகை கொடுத்து சமீபத்தில் வாங்கி இருக்கிறார். தற்போது சமந்தா ஹிந்தியில் மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்த நிலையில் சமந்தா- சித்தார்த் இடையேயான காதல்- திருமணம் வரை சென்று நின்றிருக்கும் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நாகசைதன்யாவிற்கு முன்பு சமந்தா அவர்கள் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தார் என்று சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. பொது இடங்களில் இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

சமந்தா- சித்தார்த் திருமண பூஜை:

இவர்கள் இருவரும் படங்களில் சேர்ந்து நடிக்கும்போது இவர்கள் குறித்து பல காதல் கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் வெளிவந்தது. அதில் ஒன்று இவர்களுடைய திருமணம் குறித்தது தான். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பூஜை ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார்கள். அந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து இவர்களுடைய திருமணத்திற்கான பூஜை தான் என்று பேசப்பட்டது. ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்தால் ஏதோ திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது. இதை நெட்டிசன்கள், ரசிகர்களும் திருமணத்திற்கான நடத்தப்பட்ட பூஜை என்று வதந்தியை கிளப்பி விட்டு இருந்தார்கள். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement