விஜய் படத்தை கலாய்த்தாரா ராஜமௌலி ? – சூப்பர் ஸ்டார் பட்ட பஞ்சாயத்து சென்று கொண்டு இருக்கும் வேளையில் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

0
1664
Rajamouli
- Advertisement -

விஜய் படத்தை ராஜமவுலி கலாய்த்து பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமவுலி. இவர் தெலுங்கு மொழியில் தான் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர் முதன் முதலில் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது மாவீரன் படம் தான். இந்த படத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இவர் நான் ஈ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. பின் இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி திரைப்படம் தான்.

- Advertisement -

பாகுபலி படம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படம் ஆனது. இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையை படைந்தது. இதனை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் RRR. இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது.

RRR படம்:

RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வெளியாகி இருந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் தான் ராஜமௌலிக்கு ஆர் ஆர் ஆர் படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் ஒரு வரலாற்று, புராணங்களை இந்த காலத்திற்கு ஏற்ப படங்களாக எடுங்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அதுக்கேற்றவாறு தற்போது ராஜமவுலி அவர்கள் மகாபாரத கதையை 10 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ராஜமௌலி ரிமேக்ஸ் படம்:

தற்போது ராஜமவுலி அவர்கள் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார். இதற்கான முதற்கட்ட பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் விஜயை விமர்சித்து ராஜமௌலி டீவ்ட் போட்ட தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ராஜமௌலி உடைய பெரும்பாலான படங்கள் இந்திய மொழிகளில் ரீமேக்ஸ் செய்யப்பட்டு வருகிறது. அதில், ராஜமௌலியின் முதல் படமான ஸ்டூடண்ட் நம்பர் 1 தமிழில் அதே பெயரில் சிபிராஜ் நடிப்பில் வெளியாகியிருந்தது.

ராஜமௌலி டீவ்ட்:

பின் சிம்ஹாத்ரி படம் விஜயகாந்த் நடிப்பில் கஜேந்திரா, விக்ராமர்குடு படம் சிறுத்தை என்று பல படங்கள் ரிமேக்ஸ் செய்திருந்தார்கள். அதேபோல நடிகர் விஜய்யின் நடிப்பில் வந்த குருவி படமும் சத்ரபதி படத்தை தழுவி உருவானது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜமவுலி டீவ்ட் ஒன்று போட்டதாக ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டு இருக்கிறார்கள். அதில், வெளியீட்டுக்கு பிறகு நிறைய பரிந்துரைகளை பார்த்தேன். தமிழ் படம் (விஜய் ஹீரோவாக நடித்தது) அந்த கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அதில் இடைவேளையும் கிளைமேக்ஸும் மாற்றப்பட்டது. காலி என்று குறிப்பிட்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பஞ்சாயத்து சென்று கொண்டு இருக்கும் வேளையில் ராஜ மௌலியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது

Advertisement