ஆறு வருடங்களுக்கு முன் தனுஷ் – செல்வராகவன் டீவீட்டின் உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் செல்வராகவன், தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் வித்தியாசமான கதைகளை எடுக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் கதை ஆசிரியர் பணியாற்றினார். அதன் பின்னர் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார் இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது.

அதன் பின்னர் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. அதிலும் இவர், தனுஷை வைத்து எடுத்த ‘புதுப்பேட்டை’ படம் ரசிகர்கள் மத்தியில் அப்போது வரவேற்பைப் பெற தவறவிட்டாலும் இன்றளவும் இப்படம் பேசப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : இரண்டாம் திருமணத்திற்கு பின் படு கிளாமர் – நீச்சல் உடையில் Vj பூஜா வெளியிட்ட புகைப்படம்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் ட்விட்டரில் ஆறு ஆண்டுகளுக்கு முன் உரையாடல் தற்போது பேசப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வராகவன், தனது கல்லூரியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு தனுஷ், எப்போதும் முன்னோடி என்று கமன்ட் செய்ய அதற்கு செல்வராகவன், உங்கட்ட எதாவது பள்ளி அல்லது கல்லூரி பற்றிய நினைவுகள் இருக்கா என்று கேட்டிருந்தார்.

இதற்கு தனுஷ், நான் எப்போ காலேஜ் போனேன் ? ஸ்கூல் மட்டும் தான். காலேஜ் வாழ்க்கை எப்படி இருக்கும்னு கூட தெரியாது என்று கூற, அதற்கு செல்வராகவன், ஸ்கூல் மாதிரி எல்லாம் இல்ல, ஆனால், ஊர் சுற்றுவது செம ஜாலியாக இருக்கும், அது வேற என்று கூறி இருந்தார். இதற்கு தனுஷ், சமூக வலைதளம் என்று கூட பாராமல் ‘வெறுப்பேத்தாத டா’ என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement