‘கால்ல ஏன் விழுற, அறிவில்ல’ – ரஜினி வீடியோவால் தற்போது வைரலாகும் ரஞ்சித்தின் பழைய வீடியோ.

0
1720
- Advertisement -

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ தற்போது வைரலாகிவரும் நிலையில் ரஜினியை வைத்து இரண்டு படம் எடுத்த பா.ரஞ்சித்தின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. . தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் படத்தின் இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தை பார்த்த துணை முதல்வர் :

இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். அங்கே பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் ரஜினி உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ சென்றிருந்தார். அப்போது ரஜினிகாந்தை பார்த்த செய்தியாளர்கள் பேட்டி எடுத்து இருக்கிறார்கள். அதில் ரஜினிகாந்த், உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறேன்.

-விளம்பரம்-

யோகி காலில் விழுந்த ரஜினி :

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுளின் ஆசிர்வாதம் என்று பேசி இருந்தார். ஆனால், ஜெயிலர் படத்தை பார்த்த ஆதி ஆதித்யநாத் வரவில்லை.. இருப்பினும் உ.பி துணை முதல்வருடன் படம் பார்த்தார் ரஜினி. இந்நிலையில், தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் :

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் வில்லனின் பேத்தி காலில் விழ வரும் போது அந்த சிறுமியிடம் ரஜினி ‘வேண்டாம்மா, வணக்கம் சொல்லு போதும்’ என்று கூறும் வீடியோவை பகிர்ந்து ரஜினியை கலாய்த்து வருகின்றனர்.

ரஞ்சித்தின் பழைய வீடியோ :

இப்படி ஒரு நிலையில் ரஞ்சித் பேசும் பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பலர் தற்போது பகிர்ந்து வருகின்றனர். அதில் பேசும் ரஞ்சித் ‘ஏன் கால்ல விழுற, அறிவில்ல உனக்கு. இன்னொருத்தன் கால்ல விழுறது எவ்வளவு பெரிய அடிமைத்தனம். அந்த அடிமைத்தனத்தை நீ ஏன் தொடர்ந்து செஞ்சிட்டு இருக்க. உன் அப்பா, அம்மா காலை தவிர வேற எவன் கால்லயும் விழாத நீ’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement