‘குட்டி குட்டி பாவாடைய போட்டு எங்கள உசுப்பேத்துற’ – ஊ சொல்றியா மாமாவின் male version. பாடல் வரிகளை பாருங்களேன்.

0
850
samantha
- Advertisement -

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் male version பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியானது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

-விளம்பரம்-

சூப்பர் ஹிட் அடித்த சமந்தாவின் ஐட்டம் பாடல் :

மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

கொந்தளித்த ஆண்கள் அமைப்பு :

ஆனால், இந்த பாடலின் ஆண்களை தவறான எண்ணம் கொண்டவர்கள் போல கூறப்பட்டு இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும், ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று புகார் அளித்து இருந்தது. மேலும், இந்த பாடலுக்கு எதிராக ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல தமிழகத்திலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஊ சொல்றியா பாடலின் Male Version :

இளஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் உள்ளது எனக் கூறி இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் பாடலை பாடிய நடிகை ஆண்ட்ரியா, அதற்கு நடனம் ஆடிய சமந்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்தது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலின் Male Version பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பாடலின் தமிழ் வரிகள் பின்வருமாறு,

-விளம்பரம்-

புல்லட் வண்டில வந்தா சூப்பரா இருக்குன்னு சொல்றீங்க
ஏசி கார்ல இன்னோருத்தன் வந்தா பைக்குக்கு பாய் சொல்றீங்க
வண்டி இல்ல, காரு இல்ல Chanceக்காக காத்திட்டு இருக்கீங்க
உண்மையா சத்தியமா சொல்றேன்
உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

சிக்ஸ் சிக்ஸு Pack இருந்தா Sexy-யா இருக்குன்னு சொல்றீங்க
டப்போடு ஒருத்தன் தொப்பையோட வந்த Pack-னா என்னனு கேக்குறீங்க
பேக்கும் இல்ல தொப்பையும் இல்ல உங்க டார்கட் டப்புங்க
அழகா இருந்து என்ன பிரயோஜனம் உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி.

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

ஷாப்பிங் கீப்பிங் கூட்டிட்டு போய் சர்வ நாசம் பண்றீங்க
சினிமா கினிமான்னு கூட்டிட்டு போய் வச்சி செஞ்சி விட்டுறீங்க
Atm Paytm தவற வேற ஒன்னும் இல்லைங்க
Moneyஅ மட்டும் பாத்துட்டு மனச பாக்க மாற்றீங்க
உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

உன் கூட தான் என் வாழ்கைனு வாய் கிழிய சொல்றீங்க
என் மனசு உசுரும் நீ தான்னு எங்கள முறுக்கேத்துறீங்க
மனசும் இல்ல உசுரும் இல்ல .
சந்தர்ப்பம் வந்துச்சின்னா உங்க பொம்பள புத்தி வக்கீர புத்தி

ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,
ஊ சொல்றியா பாப்பா, ஊஊ சொல்றியா பாப்பா,

தேவி ஸ்ரீ பிரசாத்தின் ரியாக்ஷன் :

இந்த பாடல் தற்போது சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த பாடல் யூடுயூபில் வெளியான 5 நாட்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை குவித்து இருக்கின்றனர். இந்த பாடலை பகிர்ந்துள இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ‘Omg, இது செமையா இருக்கிறது. OoAntavaOoOoAntava பாடல் அனைத்து மொழிகளிலும் வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement