டி.ராஜேந்தர் இயக்கிய முதல் படம், ஒருதலை ராகம்’ (1980). கதையையும் தாண்டி இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கக் காரணமாக அமைந்தது, படத்தில் இருந்த புதுமுகங்கள். ஏனெனில், நடித்த நடிகர்கள், கேமராமேன், இயக்குநர் எனப் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்குப் புதிதாக அறிமுகம் ஆனவர்கள்.ஒருதலை ராகத்து’க்குப் பிறகு அத்தனை நடிகர்களும் பின்னாளில் மக்களிடையே பிரபலமானார்கள். அந்த வகையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த ரூபா தேவியும் ஒருவர் தான். இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் இதற்கு பின்னர் தமிழில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை.

ஒருதலை ராகம் படத்திற்கு பின்னர் தமிழில் ஒரு இரண்டு ஆண்டுகளில் பட படங்கள் நடித்தார். 1980-82 ஆகிய இந்த இரண்டு ஆண்டில் மட்டும் 15கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பின்னர் 8 ஆண்டு கழித்து பாட்டுக்கு நான் அடிமை படத்தில் ராமராஜன் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் தமிழில் இவரால் ஜொலிக்க முடியவில்லை இருப்பினும் கன்னட திரையுலகில் கொடிகட்டு பறந்தார்.

Advertisement

1990கும் பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்தார். இவர் நடிகை என்பதை தாண்டி சிறந்த டான்சரும் கூட கன்னட சினிமாவில் பல படங்களில் பல பாடல்களில் செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது தமிழில் ஏன் டான்சராக நடிக்கவில்லை என்ற கேள்விக்கு அதுக்குத் தடையாக இருந்தது, `ஒருதலை ராகம்’ போன்ற படங்கள்தான்’

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சேலைகட்டி பவ்யமான பெண்ணாக நடிச்சிட்டேன்.அதனால, என்னை எல்லா ரசிகர்களும் அப்படியே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நேரத்தில் டான்ஸர், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என வந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இயக்குநர்களும் எனக்கு ஹோம்லி கேரக்டர்களையே கொடுத்துட்டாங்க. கடைசிவரை தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்க முடியலையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது.

Advertisement

மற்றபடி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட எல்லா ரோல்களிலும் நடிச்சிருக்கேன். என்று கூறியிருந்தார். அதே போல டிஆர் மனைவி உஷாவுடனான நட்பு குறித்து பேசிய அவர் ‘`உஷா எனக்கு ரொம்ப நெருக்கம். படத்துல நடிக்கும்போதே எங்க இரண்டு பேருக்குமான நட்பு ஸ்ட்ராங்கா இருந்தது. அந்தப் படத்துக்குப் பிறகுதான் டி.ராஜேந்தரும் உஷாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

Advertisement

ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே இருந்த நட்பு இப்போவரை தொடருது. அவங்க குடும்ப விழாக்களுக்கு என்னைக் கூப்பிடுவாங்க. ஆனா, அவங்க குழந்தைகள்கிட்ட அதிகம் பேசினது கிடையாது. தமிழ்த் திரையுலகின் சிறந்த ஜோடினு அவங்களைச் சொல்லலாம். என்று கூறி இருந்தார். மேலும், இப்போது, கன்னட சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். கூடவே, படங்களும் பண்ணிட்டு இருக்கேன். மகன் இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கார். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், எங்க வாழ்க்கை ரொம்ப திருப்தியாப் போயிட்டு இருக்கு என்றும் கூறி இருந்தார்.

Advertisement