ஒஸ்தி பட நடிகைக்கு விரைவில் காதல் திருமணம்.! மாப்பிள்ளை இவர் தான்.!

0
1118
Richa-Ganagopathya
- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிச்சா காங்கோபாதியாய்.டில்லியைச் சேர்ந்த மாடல் அழகி ரிச்சா கங்கோபாத்யாய. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தார்.

-விளம்பரம்-
Image result for richa gangopadhyay

2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.தமிழில் மயக்கம் என்ன , ஒஸ்தி ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். வசீகரமான அமைப்பினால் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : போன் ரிப்பேர் செய்து விட்டு டிப்ஸ் கேட்ட ஊழியர்.! தர மறுத்துள்ள அஜித்.! ஆன இப்படி ஒரு உதவி செஞ்சிருக்கார்.! 

- Advertisement -


தமிழிலில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடித்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். எம்பிஏ படித்துள்ள ரிச்சா, பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்.இந்த நிலையில் அவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

கடந்த சில மாதத்திற்கு முன்னர் ரிச்சா தனது காதலர் ஜோவுடன் இருக்கும் படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் “ஜோவை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிசினஸ் ஸ்கூலில் சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். இப்போது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement