ஒருத்தரோட வெகுளித்தனத்த வச்சி இப்படியா ஆசிங்கப்படுத்துவீங்க – பெண் தொகுப்பாளினி செயலால் ரசிகர்கள் அதிருப்தி.

0
787
Vishal
- Advertisement -

விஷால் என்னிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் தான் நடிக்க ஒத்து கொண்டேன் என்று ஓட்டேரி சிவா கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். இருந்தாலும், விஷால் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது நடிகர் விஷால் அவர்கள் “மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

மார்க் ஆண்டனி படம்:

இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ட்ரெய்லர் வீடியோ:

மேலும் இந்த படத்தினுடைய இன்று ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடி இருக்கிறது. டைம் டிராவல், ஆக்சன், திரில்லர், கேங்ஸ்டர் போன்ற பலவித ஜர்னலில் இந்த படத்தை எடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதோடு இந்த ட்ரைலரில் ஒரு காட்சியில் மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதா இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..இந்த நிலையில் ஓட்டேரி சிவா குறித்து எழுந்த சர்ச்சைக்கு விழாவில் விஷால் கொடுத்திருக்கும் விளக்கம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ஓட்டேரி சிவா குறித்த சர்ச்சை:

அதாவது, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஓட்டேரி சிவா நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் நடிப்பதற்காக இயக்குனர், தயாரிப்பாளர் இவரிடம் கெஞ்சி கேட்டு இருந்தார்களாம். இவர் பிஸியாக இருப்பதால் நடிக்க முடியாது என்று மறுத்து இருக்கிறார். பின் விஷால் இவரிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் தான் நடிக்க ஒற்றுக்கொண்டதாக சிவா கூறியிருக்கிறார். தற்போது இதை ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தொகுப்பாளர் கேட்டதற்கு ஆமாம் விஷால் என்னிடம் கெஞ்சி கேட்டதால் தான் ஒத்துக்கொண்டேன் என்று கூறிய உடனே அங்கிருந்த விஷால் நான் உன்னிடம் கெஞ்சி கேட்டேனா? உண்மையை சொல்லு என்று கேட்டிருக்கிறார்.

விளக்கம் கொடுத்த ஓட்டேரி சிவா:

அதற்கு ஓட்டேரி சிவா சிரித்துக் கொண்டே நான் சும்மா விளம்பரத்திற்காக தான் சொன்னேன். விஷால் அண்ணா இல்லை என்றால் நான் இங்கு இல்லை. நான் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். அவர்தான் அவருடைய அலுவலகத்தில் எனக்கு ஒரு இடம் கொடுத்து, சாப்பாடு போட்டு, சம்பளமும் கொடுக்கிறார். பின் எப்படியாவது என்னை உயர்த்தி விட வேண்டும் என்று படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். விஷால் அண்ணாவால் தான் இப்போது நான் இங்கு இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார். இப்படி ஓட்டேரி சிவாவின் வெகுளித்தனத்தை பயன்படுத்தி கலாய்த்த அந்த தொகுப்பாளனியை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement