ஜாக்குவார் கார்..! வெளிநாடுட்டு கலைநிகழ்ச்சி.! செழிப்பாக இருக்கும் ஓவியா.!

0
894
- Advertisement -

பிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் என கிடைத்ததெல்லாம் ஆரவ்வைக் காதலித்ததாகச் சொன்ன ஓவியாவுக்கே.

-விளம்பரம்-

oviya

- Advertisement -

பிக் பாஸ் முதல் சீஸன் முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்களுடன் வொர்க் பண்ணுகிற மாதிரி தெரியலையே எனக் கேட்காதீர்கள். மேடம் இப்போது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார். ‘படங்களில் நடிப்பதைவிட இதுல ரிலாக்சா ஃபீல் பண்ண முடியுது’ என்கிறாராம்.

இந்த நேரத்தில் ஓவியா குறித்த இன்னொரு தகவல், சில மாதங்களுக்கு முன் ‘ஜாக்குவார் கார் வாங்கியிருக்கிறார்’ என்பதே.

-விளம்பரம்-

jagur

பிக் பாஸ் இரண்டாவது சீஸன் க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இரண்டாம் சீஸனின் போட்டியாளர்களிடையே ‘யார் அடுத்த ஆரவ்’ என்கிற கேள்வியைவிட, ‘நம்மில் யார் ஓவியா’ என்றே பரபரக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பிக் பாஸ் ரசிகர்களும் ரித்விகாவா ஐஸ்வர்யாவா யாஷிகாவா என பெட் கட்டாத குறையாக விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

Advertisement