நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆரவ் மீதான காதலை ஒப்புக்கொண்ட ஓவியா.!

By Rajkumar · 26/1/2019

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததது ஆரவ் மற்றும் ஓவியா தான். பிரபல நடிகையான ஓவியா அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வுடன் காதலில் விழுந்தார். ஆனால், ஆரவ்வோ, ஓவியா மீது காதல் இல்லை என்று கூறினார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஓவியாவால் ஆரவ்வை மறக்க முடியவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று நினைத்து வந்த நிலையில் ஆரவ் மற்றும் ஓவியா அடிக்கடி சில புகைப்படங்களும் விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.

இதையும் படியுங்க : ஓவியாவுடன் மட்டும் பிறந்தநாள் கொண்டாடிய ஆரவ்..! வைரலாகும் புகைப்படம்..! 

ஆரவ்வும் , ஓவியம் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த அணைத்து கேள்விகளுக்கும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. நிறைய சண்டைகள் நடந்தன. ஆனால் இப்போது நாங்கள் சமாதானமாகி விட்டோம். 

அதே போல நானும் ஆரவ்வும் திருமணம் முடித்துவிட்டோம், திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றன. அதெல்லாம் இப்போதைக்கு பொய். அதே போல ஆரவ்வுடன் நட்பு மட்டுமெ எனக் கூற முடியாது. விரைவில் நல்ல விஷயத்தை அறிவிப்போம் என்றார். ஓவியா பேசியதை வைத்து பார்க்கும் போது விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை என்று தான் தோன்றுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full