பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வர ஓவியாவின் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
6153
oviya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  ஓவியாவின் புகழ் உச்சியை தொட்டுவிட்டது. ஓவியா இல்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க கூடாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர்.

-விளம்பரம்-

aarav-oviya_bigg-boss-tamilஓவியா தானாக வெளியேறிய பிறகு நிகழ்ச்சியின் TRP வெகுவாக பாதிப்படைந்துள்ளது. அதை சரி செய்ய நிர்வாகத்தின் பக்கத்தில் இருந்து பல முயற்சிகள் செய்தும் எதுவும் சரிபட்டு வரவில்லை.

- Advertisement -

ஓவியாவோ வெளியேற்றத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்து கொண்டார். அதை தொடர்ந்து நண்பர்களுடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார்.

ஓவியாவின் வெற்றிடத்தை நிரப்பு அந்த தொலைக்காட்சி நிறுவனம் பல முன்னணி நடிகைகளை நிகழிச்சியில் பங்கேற்க முயற்சி செய்து வருகிறது.

-விளம்பரம்-

oviya-kamalஇருப்பினும் ஓவியாவின் இடத்தை வேறு நடிகைகளால் நிரப்ப முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் ஓவியாவின் மேல் அதிக அன்பை கொண்டுள்ளனர் என்பது சமூக வலைத்தளம் வாயிலாக உணரமுடியும்.

ஆகையால், ஓவியாவை திரும்ப அழைத்து வர நாள் ஒன்றிற்கு 5 லட்சம் வரை சம்பளம் தருவதாக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பாக கோரிக்கைவைத்துள்ளார்களாம். அதற்கான முடிவு இந்த வாரம் தெரியவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்

Advertisement