‘குக்கூ’ படத்தில் அப்படி நடித்ததால் நிஜத்தில் அட்டகத்தி தினேஷ்ஷுக்கு ஏற்பட்ட பாதிப்பு – பா.ரஞ்சித் கூறிய ஷாக்கிங் தகவல்.

0
2545
Dinesh
- Advertisement -

நடிகர் தினேஷ் படத்தில் நடித்ததால் நிஜத்தில் உண்மையாகவே பார்வை இழந்து இருந்தார் என்று இயக்குனர் ரஞ்சித் அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தினேஷ். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால், இந்த படத்திற்கு முன்பே இவர் ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம் போன்ற பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது அட்டகத்தி படம் தான். அதிலிருந்து இவரை அட்டகத்தி தினேஷ் என்று பலரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

தினேஷ் திரைப்பயணம்:

இதற்கு பிறகு இவர் திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு, உள்குத்து, அண்ணனுக்கு ஜே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான முக்கிய படங்களில் ஒன்று தான் குக்கூ. இந்தப் படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

குக்கூ படத்தில் தினேஷ்:

இந்தப் படத்தை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் தினேஷ் உடன் மாளவிகா நாயர், ஆடுகளம் முருகதாஸ், இளங்கோ, நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் கண் பார்வை இல்லாதவராக தினேஷ் நடித்திருந்தார். தன்னுடைய கண்ணை வித்தியாசமாக வைத்து இவர் நடித்திருந்ததால் உண்மையிலேயே சில பிரச்சனைகள் வந்திருக்கிறது.

-விளம்பரம்-

பா. ரஞ்சித் அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து பேட்டியில் பா. ரஞ்சித் கூறியிருப்பது, குக்கூ படத்தில் அட்டகத்தி தினேஷ் பார்வையில்லாதவர் கதாபாத்திரத்தில் நடித்தார். படம் முழுக்க அவர் கண்களை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு நடித்திருந்தார். இதனால் சில நாட்களில் உண்மையிலேயே அவருக்கு பார்வை போய்விட்டது. கிட்டத்தட்ட அந்த படத்தில் நடித்தது போலவே அவருடைய கண்கள் மாறிவிட்டது. பின்னர் பல்வேறு சிகிச்சைகளுக்கு பிறகு தான் அவருடைய கண் பழைய நிலைமைக்கு திரும்பியது.

தினேஷ் நடிக்கும் படங்கள்:

கதாபாத்திரத்திற்காக மிகவும் டெடிகேஷனோடு செய்யும் நடிகர்களில் தினேஷும் ஒருவர் தான் என்று பாராட்டி பேசியிருந்தார். இப்படி இயக்குனர் பா ரஞ்சித் அளித்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நடிகர் அட்டகத்தி தினேஷ் அவர்கள் ஜே பேபி, தீரும் போதும் போன்ற சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Advertisement