கட்டப்பஞ்சாயத்து, பா.ரஞ்சித் சகோதரர் அடியாட்களுடன் சென்று தகராறு. போலீசில் புகார்

0
371
- Advertisement -

நிலத்தகராறு விவகாரத்தில் அடியாட்களுடன் பா ரஞ்சித் சகோதரர் சென்று தாக்குதல் நடத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் மணலி புதுநகரில் ரிஷி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆனால், இந்த நிலம் தனக்கு சொந்தம் என்று சகிலா என்பவர் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் இந்த நிலத்தை ரிஷி ரிஜிஸ்டர் செய்யும் வேலையில் சகிலா, பா ரஞ்சித்தின் சகோதரர் பிரபு மற்றும் அடியாட்களுடன் சென்று தகராறு செய்து இருக்கிறார். மேலும், ரிஷி-ஷகீலாவுக்கு இடையே பஞ்சாயத்து நடந்து இருக்கிறது. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு ஒரு கட்டத்தில் கோபமடைந்து வாக்குவாதம் முத்தி இருக்கிறது. பின் அடியாட்களை வைத்து சிசிடி கேமரா மீது கற்களைக் கொண்டு தாக்கி தகராறு செய்திருக்கிறார்.

- Advertisement -

பா.ரஞ்சித் சகோதரர் செய்த வேலை:

இது தொடர்பாக ரிஷி மணலி புதுநகர் காவல் நிலையத்தில் ரஞ்சித்தின் சகோதரர் பிரபு, அவருடன் சென்ற வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித் திரைப்பயணம்:

இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார். இதனால் இவர் படங்கள் குறித்தும், இவர் மீதும் விமர்சனங்கள் இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ப்ளூ ஸ்டார்.

-விளம்பரம்-

ப்ளூ ஸ்டார் படம்:

இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி உட்பட பல நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

விக்ரம்- பா ரஞ்சித் கூட்டணி:

தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, டேனியல் கால்டாகிரோன், பார்வதி, என பலர் நடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

Advertisement