வாழ்க்கையில் 20 முறைக்கு மேல் பார்த்தது விஜய் படம் தான்.! எந்த படம் தெரியுமா..? ரஞ்சிதா கொடுத்த ஷாக்

0
1124
vijay-ranjith

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார் இயக்குனர் ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை எடுத்ததற்கு பிறகு இவருக்கான மார்க்கெட் அதிகம் கூடி விட்டது என்றும் கூறலாம்.
pa.ranjith

இயக்குனர் ரஞ்சித் மீது ‘காலா’ படத்திற்கு பின்னர் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தற்போது ரஞ்சித்தை வைத்து படத்தை இயக்க பல இந்தி சினிமா தயாரிப்பு கம்பெனிகள் வலை வீசி வருகின்றது. ஆனால், ரஞ்சித் இது குறித்து இன்னும் யோசிக்கவில்லயாம்.

சமீபத்தில் காலா படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்ட இயக்குனர் ரஞ்சித்திடம், உங்களுக்கு பிடித்த படம் எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் ரஞ்சித் சற்றும் யோசிக்காமல் இளையதளபதி விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை ‘ படத்தை கூறியுள்ளார்.

Kadhalukku-Mariyadhai

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தை அவர் 20 முறைக்கு மேல் பார்த்துள்ளாராம். ஏற்கனவே ஒரு பேட்டியில் இயக்குனர் ரஞ்சித் ‘நான் விஜய்யை வைத்து படம் எடுத்தால் அது அரசியல் கலந்த காதல் படமாக தான் இருக்கும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இதனால், ஒரு வேலை ரஞ்சித் விஜய்யை வைத்து படம் இயக்க போவது உறிதியோ என்று விஜய் ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.