அந்த டைலாக் ரஜினி சாருக்கு பிடிக்கல, பேச மாட்டேன்னு சொல்லிட்டார் – முதன் முறையாக சொன்ன பா ரஞ்சித்.

0
687
ranjith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-
ரஞ்சித்தின் அடுத்த படம் எது, எங்கு தெரியுமா.? போட்டி போடும் நிறுவனங்கள்!  அடுத்த லெவல்! - Tamil Behind Talkies

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ரைட்டர் படத்தை இவர் தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.

- Advertisement -

பா.ரஞ்சித்தின் திரைப்பயணம்:

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் அவர்கள் கமலை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்த பா ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று கபாலி. 2016-ஆம் ஆண்டு இந்த படம் வெளிவந்திருந்தது.

கபாலி படம் குறித்து ரஞ்சித் அளித்த பேட்டி:

இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கிஷோர் குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் 3500 திரையரங்குகளில் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்தும், ரஜினிகாந்த் குறித்தும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, கபாலி படத்தின் டீஸரில் ரஜினி சார் உடைய ஒரு டயலாக் வரும். அது ரஜினி சாருக்கு பிடிக்கவில்லை. இந்த மாதிரி நான் பேசுற ஆளு கிடையாது, நான் பேசமாட்டேன் என்று சொன்னார்.

-விளம்பரம்-

கபாலி டீசெர் ரஜினிக்கு பிடிக்காத காரணம்:

உடனே நான், நீங்கள் பேசிப்பாருங்கள் நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொன்னேன். பின் ஏதேதோ சொல்லி கட்டாயப்படுத்தி ரஜினி சாரை அந்த டயலாக் பேசி நடிக்க வைத்தேன். டீசர் ரெடியான பிறகு அவரிடம் காண்பித்தேன். அப்பவும் ஓகே ஆனால், யோசித்து முடிவெடுங்கள் என்று சொன்னார். நானும், எல்லோருக்கும் பிடிக்கும், எல்லோரிடமும் காண்பித்தேன் நன்றாக இருக்கு என்று சொன்னார்கள். சரி என்று அவர் அரை மனதோடு தான் ஒத்துக்கொண்டார். பின் ரஜினி மகள் சௌந்தர்யா விடமும் டீசரை காண்பித்தேன். அவர்கள் செம சூப்பராக இருக்கிறது என்று சொன்னார்.

ரஜினி சார் பாராட்ட காரணம்:

டீசர் வெளிவந்த முதல் நாளில் போன் பண்ணி நல்ல இருக்கு சார் என்று நார்மலாக ரஜினி சார் சொன்னார். அடுத்த நாளே அவர் சூப்பரா இருக்குங்க, நான் எதிர்பார்க்கவே இல்லை வேற லெவல் இருக்கிறது, கலக்கிட்டீங்க சார். நீங்கள் சொன்னது தான் உண்மை. சின்ன பசங்க எல்லாம் அந்த டயலாக் பேசுகிறார்கள் என்று பாராட்டினார். பின், நீங்கள் இதுவரை பண்ண எல்லாமே செம சூப்பராக இருந்தது. நான் இனி எதிலும் தலையிட வில்லை. நீங்கள் எது பண்ணாலும் எனக்கு ஓகே நான் முழுமையாக நம்புகிறேன் என்று சொன்னார். அவருடைய நம்பிக்கையை வைத்து தான் இந்த படம் உருவானது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இந்த படம் ஹிட் கொடுத்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement