விக்ரம் பட விழாவில் கமலை வைத்து படம் பண்ணுவதை உறுதி செய்த ரஞ்சித் – கமல் நடித்த இந்த படம் மாதிரி இருக்குமாம்.

0
376
ranjith
- Advertisement -

விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச்சில் பா.ரஞ்சித் வெளியிட்டிருக்கும் அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

விக்ரம் படத்தின் கதை:

அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார். இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க பார்க்கிறார். இதனால் கமலும் அதே ஜெயிலுக்கு செல்கிறார். அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமலின் வரி மற்றும் குரலில் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த பாடல் சென்னை தமிழில் பாடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

விக்ரம் படம் பற்றிய தகவல்:

ஆனால், அதில் மத்திய அரசை விமர்சித்து பாடி இருக்கிறார்கள் என்று கமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் ரஞ்சித் வெளியிட்ட அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

விழாவில் பா. ரஞ்சித் சொன்னது:

இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பா ரஞ்சித் அவர்கள் கூறியிருப்பது, விரைவில் நான் கமலுடன் பணியாற்ற இருக்கிறேன். இந்த படம் மதுரையை மையமாகக் கொண்டு விருமாண்டி ஸ்டைலில் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனால் கமல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கமல்-ரஞ்சித் காம்போ கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறி வருகின்றனர்.

பா. ரஞ்சித் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். பின் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

Advertisement