படையப்பனோட கல்யாண கேசட் நீலாம்பரிக்கு கிடைச்சது எப்படி ? – ரசிகர் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதில்.

0
1245
Padaiyappa
- Advertisement -

படையப்பா படத்தில் உள்ள ஒரு லாஜிக் மிஸ்டேக்கை தற்போது ரசிகர் ஒருவர் கண்டுபிடித்து கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் வெற்றி படங்களில் ஒன்று தான் படையப்பா. ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளியான படம் ‘படையப்பா’.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

- Advertisement -

படையப்பா படம்:

இதற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் மாஸ் காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அப்போது வந்த படங்களில் ‘படையப்பா’ தான் ரூ.50 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டப்பட்டு தான் வருகிறது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. படையப்பா படம் வெளியாகி 24 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது.

படையப்பா படம் குறித்த கேள்வி:

இந்த நிலையில் படையப்பா படம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்டிருக்கும் கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. படையப்பா படத்தில் ரஜினியின் திருமண வீடியோவை நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். இது குறித்த கேள்வியை தான் ரசிகர் கேட்டிருக்கிறார். அதாவது, ரஜினியின் அந்த திருமண வீடியோ அவருக்கு எப்படி கிடைத்தது என நெட்டிசன் ஒருவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ரசிகர் அளித்த பதில்:

அதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான பதில்களை பதிவிட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இது லாஜிக் மிஸ்டேக்கா என்று கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இதற்கு கூறியது, கேஸ் ரவிக்குமார் ஒன்னும் சும்மா இல்லை. அவங்க வீட்டு வேலைக்காரன் அனுமோகன் வீடியோ எடுக்கிறதை அங்கங்க சில இடங்களில் காமித்திருப்பார். அவர் மூலமாகத்தான் படையப்பா ரஜினி உடைய கல்யாண வீடியோ கிடைத்திருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

ரஜினி நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் கோடிகளை அள்ளியிருந்தது. இதனை அடுத்து தற்போது ரஜினி அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இன்னொரு படத்திலும் ரஜினி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement