விஜய் அஜித் கூட வேணுமாம் இந்த இளம் நடிகர் கூட தான் நடிக்கணுமாம்.! பகல் நிலவு நடிகை ஷிவானி.!

0
15204
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியல் கடந்த மாதம் தொடங்கியது. இந்த தொடரில் நடித்து வந்த ஷிவானி அனைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.

-விளம்பரம்-
ஷிவானி

‘கடைக்குட்டி சிங்கம்’ ஒளிபரப்பாகத் தொடங்கி முழுதாக ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அதற்குள் கதாநாயகி ஷிவானி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார். தற்போது ஜீ தமிழில் ‘இரட்டை ரோஜா’ என்கிற சீரியலில் அபி, அனு என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 12 ஆம் தேதி முதல் துவங்கியது.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷிவானியிடம் எந்த ஹீரோவோடு நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷிவானி, தல – தளபதி’க்கு அப்புறம் எனக்கு சூர்யா சாரை ரொம்பப் பிடிக்கும். இவங்ககூட நடிக்க முடியாமல் போனாலும் அதர்வாகூட கண்டிப்பா நடிக்கணும். அவர்தான் என்னுடைய சமீபத்திய க்ரஷ்’’ என்று கூறியுள்ளார்.

ஷிவானி

மேலும், படிக்கும் போது கிடைக்கப்பெற்ற சீரியல் மற்றும் பட வாய்ப்புகள் குறித்து பேசியுள்ள ஷிவானி, சினிமா மட்டுமல்ல, சீரியல் வாய்ப்புகளும் நிறைய வந்தன. சினிமாவைப் பொறுத்தவரை நயன்தாரா, ஜோதிகா, அமலாபால் மாதிரி பெண்கள் சார்ந்த கதைகளில் நடிப்பது பிடிக்கும். இவ்வளவு சின்ன வயதில் அந்த மாதிரி கதாபாத்திரம் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement