சௌந்தர்யாவ எப்படி கரெக்ட் பண்றது? ரகசிய கேள்வி கேட்ட விஜய் டிவி பிரபலம். வெளுத்து வாங்கிய பகல் நிலவு சீரியல் நடிகர்.

0
1982
Pagal nilavu soundarya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் என்ற பாட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சௌந்தர்யா. இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சிரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் இவர் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் நடித்த yours shamefully ஷார்ட் பிலிம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. பின் இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்றும் வந்து உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது பாடகி சௌந்தர்யா நடிகையாக வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். விஜயின் மாஸ்டர் படத்தில் பாடகி, நடிகையுமான சௌந்தர்யா பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

- Advertisement -

மேலும், நடிகை சௌந்தர்யாவுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஒருவர் சோசியல் மீடியாவில் சௌந்தர்யா குறித்து கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ப்ரோ நான் விஜய் டிவியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு சௌந்தர்யா மீது ஒரு கிரஷ் இருக்கிறது. அவரை எப்படி கவர் பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை.

ப்ளீஸ் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நடிகர் விக்னேஷ் கார்த்திக் கோபமாக பதிலளித்துள்ளார். அவர் அதில் கூறி இருப்பது, என்ன மாமா வேலை பார்க்க சொல்றீங்களா?? என்று கேட்டுள்ளார். தற்போது இந்த ட்வ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்களும் பலவிதமாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

நடிகர் விக்னேஷ் கார்த்திக்கும், சௌந்தர்யாவும் பகல் நிலவு சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விக்னேஷ் கார்த்தி வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் நிறைய குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக ஆனார்.

இவர் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் விக்னேஷ் கார்த்திக் நடிகர் ஆனார். அதற்கு பிறகு இவர் நட்பதிகாரம் 79, சோல பொறி இவர் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சௌந்தர்யாவுடன் இணைந்து yours shamefully என்ற ஷார்ட் பிலிம்மில் நடித்து உள்ளார். தற்போது இவர் குறும் படங்களில் நடித்து கொண்டும்,நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

Advertisement