சத்தமில்லாமல் திருமணம் முடித்த பகல் நிலவு சீரியல் விக்னேஷ் – வெளியான புகைப்படம்.

0
1845
Vigneshkarthck
- Advertisement -

இயக்குனர்- நடிகர் விக்னேஷ் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் கார்த்திக். இவர் நடிகர், ரேடியோ ஜாக்கி, இயக்குனர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். இவர் ஆரம்பத்தில் விஜேவாக தான் தன்னுடைய கேரியைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

இவர் 2019ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பரீட்சயமானார். அதனை எடுத்து 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளிவந்த கிங் ஆப் காமெடி சீசன் 1 நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அதற்குப் பிறகு இவர் தொகுப்பாளரானார்.

- Advertisement -

விக்னேஷ் கார்த்தி குறித்த தகவல்:

அதிலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கி இருந்தார் .அதனை தொடர்ந்து இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அது மட்டும் இல்லாமல் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிக் எஃப் எம் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் விக்னேஷ் கார்த்திக் தான் இருந்தார். இதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விக்னேஷ் கார்த்தி படங்கள்:

அதனை தொடர்ந்து இவர் 2016 ஆம் ஆண்டு நட்பதிகாரம் 79 என்ற படத்தில் குணச்சித்திர நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து சோலா பூரி, குற்றம் நடந்தது என்ன போன்ற பல படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் நிறைய ஷார்ட் பிலிமில் நடித்திருக்கிறார். பின் ஏண்டா தலையில எண்ண வைக்கல என்ற படத்தின் மூலம் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

அடியே படம்:

இந்த படம் வித்தியாசமான கதைக்களமாக இருந்ததால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து இவர் திட்டம் இரண்டு படத்தை இயக்கியிருந்தார். அந்த படமும் பெரிய அளவில் பேசப்படவில்லை. சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அடியே என்ற படத்தை விக்னேஷ் கார்த்தி தான் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கௌரி கிஷன், வெங்கட் பிரபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

விக்னேஷ் கார்த்தி திருமணம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமான இயக்குனராக தற்போது திகழ்கிறார். இந்த நிலையில் விக்னேஷ் கார்த்திக்கு நேற்று திருமணம் நடைபெற்று இருக்கிறது. இன்று இவருடைய வெட்டிங் ரிசப்ஷன் நடைபெற்றிருக்கிறது. இவருக்கு திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலருமே நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய திருமண வெட்டிங் ரிசப்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement