‘இப்போ 4 மாசம் ‘ – பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை பதிவிட்ட சந்தோஷமான செய்தி – ரசிகர்கள் வாழ்த்து மழை.

0
641
- Advertisement -

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனு பதிவிட்டிருக்கும் சந்தோஷமான செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சன் தொலைக்காட்சி தான். அதிலும் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சன் தொலைக்காட்சிகளும் புதுபுது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த தொடர் 2019ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க குடும்ப, காதல், நகைச்சுவை நாடகம் ஆகும். இந்த தொடர் மதியம் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் சண்முகம் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

- Advertisement -

பாண்டவர் இல்லம் தொடர் பற்றிய தகவல்:

அண்ணன்- தம்பிகள் இடையேயான உறவு குறித்த தொடராக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பாண்டவர் இல்லம் ஐந்து மருமகள்களும் எப்படி அந்த குடும்பத்தை பொறுப்புடன் வழிநடத்துகிறார்கள்? பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது தான் சீரியலின் கதை. தற்போது பல திருப்பங்களுடன் தொடர் சென்று சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அனு குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் நடிக்க அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெல்ல திறந்தது கதவு என்ற தொடரில் வில்லியாக நடித்திருந்தார். அப்படியே இவர் சன், விஜய் டிவி, ஜீ என பல சேனல்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அனு குடும்பம்:

மேலும், சின்னத்திரை சீரியலின் மூலம் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார். தற்போது இவர் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இதனிடையே இவர் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அணு சீரியலில் நடித்து வருகிறார்.

அனு பதிவிட்ட பதிவு:

இந்நிலையில் நடிகை அனு சந்தோஷமான செய்தியை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, நடிகை அனு தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இந்த செய்தியை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அனுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தற்போது பாண்டவர் இல்லம் சீரியலிலும் ரோஷினி கதாபாத்திரம் கர்ப்பமாக இருப்பதாக காட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement